ஆதார் ஆதாரத்தை எல்லாம் திரும்ப வாங்கிக்க முடியும் - பட் ஒரு கண்டிஷன் இருக்கு..!
  • 14:55PM Dec 06,2018 India
  • Likes
  • 0 Views
  • Shares

your image

 

சிம் கார்ட் வாங்குவதில் தொடங்கி பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை இன்றைக்கு ஆதார் எண் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது. சாதாரணமாக ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு கூட ஆதார் எண் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இப்படி பல இடங்களில் இதன் தேவை அதிகமாகியுள்ள நிலையில் தனி நபர் உரிமை மீறப்படுவதாக ஆதார் நடைமுறையின் மீது புகார் எழுந்துள்ளது. ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களும் உபயோகித்து வருவதால் பொதுமக்களின் அந்தரங்க தகவல் வெளியே கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் விருப்பப்பட்டால் மட்டுமே ஆதார் குறித்த தகவல்களை தரவு தளத்தில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீக்கிவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

ஒரு குழந்தை 18 வயதை கடந்துவிட்டால் ஆதார் தகவல்களை நீக்கலாமா..? வேண்டாமா..? என்ற முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுக்கலாமா என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இப்போது உதாய் அமைப்பு முன்மொழியவிருக்கும் திட்டத்தின்படி எல்லாருக்கும் இந்த வசதி கொடுக்கப்படும்.

ஆனால் இந்த வசதியை பான் கார்டை இதுவரை பெறாதவர்களும், இனிமேலும் தேவையில்லை என்பவர்களும் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஏனெனில், உச்சநீதிமன்றம் பான் கார்டுடன் ஆதார் இணைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அறிவித்திருக்கிறது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top