Lushgreen

சம்பளமே இத்தனை கோடிகள் என்றால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு இருக்கும்? இத்தனை கோடி முதலீடு செய்து எடுக்கும் படம் ஒருவேளை ஓடவில்லை என்றால் என்ன பண்ணுவாங்க?

Jun 11 2021 11:26:00 AM

பெரிய நடிகர்கள் பலரும் படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக கேட்பதால் அவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். படம் ஹிட் அடித்தால் பிரச்சனையில்லை போட்ட பணத்தை எடுத்து விடலாம். ஒருவேளை பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் சொதப்பினால் அது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெரிய நடிகர்கள் தங்களது சம்பள விஷயத்தில் கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்து கொண்டால் மட்டுமே திரையுலகத்தை சேர்ந்த அனைவருமே செழிப்பாக இருக்க முடியும்.

radhe-shyam

தெலுங்கு நடிகரான பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாயை தாண்டும் என்ற திர்ச்சி தகவல் ஒன்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெரிதும் அறியப்படாத நாயகனாக இருந்த பிரபாஸ் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக உருவெடுத்துவிட்டார். பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் வந்த சாஹோ திரைப்படம் முதல் அடுத்து அவர் நடித்து கொண்டிருக்கும் ராதே ஷ்யாம், சலார் என எல்லா திரைப்படங்களுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் கொண்ட திரைப்படங்கள் தான்.

radhe-shyam

அதிலும் அவர் நடிக்கும் மற்றொரு படமான ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் இன்னமும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க தற்போது இந்தப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த செய்தியும் இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

radhe-shyam

இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாகவும், அமிதாப் பச்சன் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர்களின் சம்பளமே 200 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு இருக்கும் என்று வாயை பிளந்து கொண்டிருக்கின்றனர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள்.

radhe-shyam

பாகுபலிக்கு பிறகு பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட சாஹோ திரைப்படம் படு தோல்வியடைந்த நிலையில் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த படத்தின் பட்ஜெட் மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.