Exquisite

ஆசையாய் வளர்த்ததை ஆட்டைய போட்டுட்டு போய்ட்டாங்களே ! இதை தட்டிக்கேட்க யாருமே இல்லையா ?

Apr 15 2021 09:20:00 PM

திருட்டு தொழில் செய்து பெரிய பணக்காரன் அல்லது தொழிலதிபர் ஆகி விடலாம் என்பது பலரின் கனவாக உள்ளது. திருடுவது என்று முடிவெடுத்துவிட்டால் சும்மா 5, 10 இப்படியெல்லாம் திருடக்கூடாது. பெருசா ஒரு திருட்டை செய்துவிட்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று பல திருடர்களும் யோசித்து கொண்டிருப்பார்கள். அப்படி யாராவது யோசித்து இந்த காரியத்தை செய்தார்களா அல்லது ஒரு கும்பல் பிளான் போட்டு திருடியுள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் மிகவும் அரிதான முயல் ஒன்று இங்கிலாந்து நாட்டில் திருடப்பட்டுள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

rabbit-theft

டேரியஸ் என்ற பெயர் கொண்ட முயல் ஒன்று காணாமல் போயுள்ளது. இது சாதாரண முயல் என்று நினைத்து விட வேண்டாம். உலகின் மிகப்பெரிய முயல்களில் இதுவும் ஒன்றாகும். கிட்டத்தட்ட 4 அடி நீளம் கொண்ட இந்த முயல் மிக நீண்ட காதுகளை கொண்டது. இங்கிலாந்து நாட்டில் உள்ள அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் இந்த முயலை வளர்த்து வருகிறார்.

rabbit-theft

மிகவும் தனித்துவமான இந்த முயல் 2010-ம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தோட்டத்தில் இருந்து திருடப்பட்டுள்ள இந்த முயலை கண்டுபிடித்து தருவோருக்கு இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று முயலில் உரிமையாளர் அன்னெட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.