#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா! ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா.? ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.!
  • 12:50PM Jul 16,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:50PM Jul 16,2019 Tamil Nadu

'நான் ஆசிரியர்களுக்கு எதிரானவள்; ஆனால் மாணவர்களுக்கு வேண்டியவள்', 'தீமை நடக்கும் போது அதனை பார்த்துக் கொண்டு அதனுடையே பயணிக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும்', 'அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கி விட்டு உழைக்கின்றாயா?', 'தனக்கென எந்தவொரு தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் தந்தையின் செல்வாக்கில் வளர்பவன் ஜீரோ' இந்த மாதிரி வசனங்கள் எல்லாம் கேட்கும் போது உள்ளே ஏதோ செய்கிறது. இந்த வசனங்கள் எழுதிய பாரதி தம்பி எழுத்தில் வீரியம் எவ்வளவு இருக்குமோ, அதே அளவு புள்ளி விவரங்களுடன் தரவுகள் தெளிவாக இருக்கும். சமீபத்தில் ஜோதிகா நடிப்பில், பள்ளியில் அரங்கேறும் அவல நிலையை காட்சி படுத்தும் அருமையான 'ராட்சசி' படத்தில் பேசப்படும் வசனங்கள் தான் மேலே சொன்னது.  இப்படிப்பட்ட படத்திலும் ஒரு சில குறைகளை கண்டறிந்து பட்டியலிட்டுள்ளனர். படம் உருவாக்கத்தில் மட்டுமே குறைகள் இருக்கின்றன. அது என்னென்னவென்று அடுத்து பார்க்கலாம்.

#1. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றிட உதவி கல்வி அலுவலரிடம் முறையிடுவது

#2. புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி 1-12 ஆம் வகுப்பு வரை வகுப்புகளைக் கொண்ட ஒருங்கிணைந்த பள்ளியா அல்லது 6 - 12 வகுப்பு 1- 5 தனியாக நடைபெறும் பள்ளியை? தலைமை ஆசிரியர் ஏன் அந்த துவக்க வகுப்பு குழந்தைகள் பயிலும் வகுப்பிற்கு செல்ல வில்லை.

#3. தலைமை ஆசிரியரும் - ஒரு ஆசிரியரே என்று காட்டிட மறந்து 10 ஆம் வகுப்பு பாடநூல்களை மட்டுமே புரட்டுதல்.

#4. பள்ளி கட்டிடங்கள் பற்றிய பிரட்சனையை எழுப்பி அதை வெறும் ஹீரோயிச பாணியில் கடந்திருப்பதும்

#5. தேவையற்ற ராணுவ பிளாஸ்பேக். ஏன் சாதாரண ஆசிரியர்களே இங்கு சாதிக்கும் போது - அது போன்ற சித்தரிப்பு மாயை இங்கு தேவையே இல்லை.

#Raatchasi movie: இது போன்ற சிறு குறைகளை நீங்கி பார்த்தால், ராட்சசி நம்மையும் புதூர் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்,பெற்றோர், ஒரு மாணவர் என்று கரம் பிடித்து அழைத்துச் செல்கின்றார் இயக்குனர். | லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top