Misc

சத்தம் போடாமல் கம்முனு இருக்கனும்! சின்னதா ஒரு சத்தம் வந்தாலும் அப்புறம் உங்க உயிருக்கு உத்தரவாதம் கிடையாது! அமைதி ஒன்றே உங்களை பாதுகாக்கும் அஸ்திரம்!

Jun 07 2021 07:01:00 PM

பின்னணி குரல் இல்லாமல் படங்களை பார்ப்பது என்பது மிகவும் சலிப்படைய செய்யும் விஷயமாக பலருக்கும் இருக்கும். ஆரம்பகாலத்தில் திரைப்படங்கள் அப்படித்தானே எடுக்கப்பட்டன. காலத்தின் தன்மைக்கு ஏற்ப அதன் பிறகே பேசும் படங்கள் வெளிவர ஆரம்பித்தது. அப்படியிருக்க இந்த நவீன யுகத்தில் வசனங்களே இல்லாமல் படம் எடுத்தால் அது ஓடுமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகங்களை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்ற படம் தான் தி கொய்ட் பிளேஸ்.

quiet-place-part-two

2018ம் ஆண்டு வெளியான தி கொய்ட் பிளேஸ் என்ற ஹாலிவுட் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக்குவித்து ஆச்சர்யப்படுத்தியது. இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் அதிகம் வசனங்களே கிடையாது. சைகை மொழியில் தான் பேசிக்கொள்வார்கள். ஹாரர் படமான இது 17 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் 340 மில்லியன் டாலர் வசூலை பெற்றது. இந்திய மதிப்பில் இது 2500 கோடியை தாண்டும். அமெரிக்காவில் மட்டும் இந்தப்படம் 188 மில்லியன் டாலர் வசூல் செய்தது.

quiet-place-part-two

முதல் பாகத்தின் அட்டகாசமான வசூல் காரணமாக பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்தப்படமும் தாமதமாகிக்கொண்டே வந்து கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வந்து கொண்டிருக்கும் அமெரிக்காவில் மட்டும் 3,726 திரையரங்குகளில் தி கொய்ட் பிளேஸ் 2 வெளியானது. வெளியான முதல் மூன்று நாட்களில் இந்தப்படம் 48 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது.

quiet-place-part-two

முதல் பாகத்தின் வசூலை விட இது இரண்டு மில்லியன் டாலர் குறைவு தான் என்றாலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்த வசூல் வந்துள்ளதே பெரிய விஷயமாகும். உலக அளவில் இதுவரை இந்தப்படம் 80 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்துள்ளது. உலகின் சில நாடுகளில் மட்டுமே இந்தப்படம் தற்போது வெளியாகியுள்ளது. எனவே முதல் பாகத்தின் மொத்த வசூலை எட்டிப்பிடிப்பது சற்று சிரமமே. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்னும் கொரோனா தாக்கம் குறையவில்லை என்பதால் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து திரையரங்குங்கள் திறக்கப்பட்டு இந்தப்படம் மற்ற நாடுகளிலும் வெளியாகும் போது கணிசமான வசூலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.