ரஷ்யா-சவுதி ஒற்றுமையில் அமெரிக்கா வயித்தெறிச்சல்!
  • 18:56PM Dec 01,2018 Chennai
  • Likes
  • Views
  • Shares

அண்மைக் காலமாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதினின் நட்பு பலரால் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தொலைக்காட்சிகளில் இதைப் பற்றி வியப்பாகப் பேசி வருகின்றனர். அதில் சிலர் இவர்கள் இருவருக்கும் "காதல்" இருப்பதாகவும் கூறி கலாய்த்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல இவர்கள் இருவரும் பேசி பழகுவது நமக்குச் சந்தேகத்தை உருவாக்குகிறது. இதில் புதின் ட்ரம்ப்பை கண்டுகொள்ளாமல் சென்றாலும் டிரம்ப் வான்டடாக சென்று புதினிடம் பேசுகிறார். தற்போது இதே போல ஒரு காதல் சம்பவம் ஜி 20 மாநாட்டில் நடந்துள்ளது. இது காதல் சம்பவம் என்பதை விடக் காதல் பொறாமை என்றும் கூறி பலர் கலாய்த்து வருகின்றனர். அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் கை குலுக்கிக் கொண்ட புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அதிபர் ட்ரம்ப் தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்தபடி வருகிறார். இந்தப் புகைப்படத்தில் ட்ரம்ப் பார்க்கும் பார்வை பொறாமையில் பார்ப்பது போல இருந்தது! இதைத் தான் அனைவரும் கலாய்த்து வருகின்றனர். அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் இவர்களின் உறவைக் கலாய்த்த விடியோவும் உள்ளது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top