Highrise

பத்து ரூவா காசுக்கு நாங்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு! இங்க ஒரு ஆளு வேலைக்கே போகாமல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியிருக்காரு இதெல்லாம் நியாயமா ?

Apr 27 2021 06:49:00 PM

நம்மில் பலரும் மாதம் ஒருமுறை சம்பளம் வாங்கும் வேலையாட்கள் தான். ஒரு சிலர் மட்டுமே முதலாளி அல்லது சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் மாத கடைசியில் நமக்கு சம்பளம் கிடைக்கும். ஆனால் இத்தாலி நாட்டில் உள்ள ஒருவர் 15 வருடங்களாக வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்கியிருக்கும் சம்பவம் அந்நாட்டு மக்களை திர்ச்சியடைய வைத்துள்ளது.

salary-robery

இத்தாலியில் கலப்ரியன் என்ற நகரத்தில் அமைந்துள்ள புக்லீஸ் சியாக்கோ மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்தார் சால்வடோர் ஸ்குமஸ். இவருக்கு தற்போது 67 வயதாகிறது. கடந்த 2005ம் ஆண்டிலேயே பணியில் இருந்து நின்று விட்டார் இவர். இருப்பினும் இன்னமும் அவருக்கு சம்பளம் வந்து கொண்டிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

salary-robery

வேலையை விட்டு நின்று கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாகியும் இதுவரை சுமார் 5,38,000 யூரோக்கள் வரை அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார். என்னதான் பலே கில்லாடியாக இருந்தாலும் ஒருநாள் சிக்கித்தானே ஆக வேண்டும். இப்போது ஒரு வழியாக இவரைப்பற்றிய ரகசியங்களை தெரிந்துகொண்டு இவரை  கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அவர் வேலை செய்த மருத்துவமனையில் அவருக்கு உடந்தையாக இருந்த 7 நபர்களும் இவரோடு சேர்ந்து தற்போது மாட்டியுள்ளனர்.