காட்டு தீயாய் பரவும் மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி..!! வலுக்கட்டாயமாக கைது செய்யும் போலீசார்..
  • 11:31AM Mar 16,2019 Pudukkottai
  • Written By AP
  • Written By AP
  • 11:31AM Mar 16,2019 Pudukkottai

பொள்ளாச்சியில் 100க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது.கோவை அரசு சட்டக்கல்லூரி,உடுமலைப்பேட்டை GVG மகளிர் கல்லூரி மாணவிகளையொட்டி பல கல்லூரிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதிகேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை SP செல்வராஜ் தலைமையில் அங்கு திரண்ட காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்லமாறு கூறியுள்ளனர்.

மாணவிகள் கலைந்து செல்ல மறுக்கவே தொடர்ந்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.இதனையடுத்து கல்லூரியிலிருந்து மாணவிகள் பலரும் தொடந்து போராட்டத்தில் ஈடுபட சாலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்துக்குத் தூண்டியதாக கூறி மாணவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலரை காவல்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றியது

Top