PUBG: நேபாளத்திலும் தடை!!! பெற்றோர்களின் தொடர் புகாரின் விளைவு!!!
  • 20:52PM Apr 12,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:52PM Apr 12,2019 Chennai

சிறிய வயதிலேயே பிள்ளைகள் கையில் MOBILE கொடுத்து அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தற்போது அதனாலேயே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக BLUEWHALE என்ற விளையாட்டு மாணவர்களின் உயிரைப் பறித்தது. இப்போது PUBG!!! பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கமே எச்சரிக்கை விடுமளவுகுகுப் பெயர் பெற்றது இது. இந்த விளையாட்டு மூலம் மனதளவில் நிறையப் பேர் பாதிக்கப்படுவதாகவும், சுடுவது கொல்லுவது போன்றவற்றை விளையாட்டாகச் செய்வதால், நிறையக் குற்றச் சம்பவங்களும் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குஜராத் அரசு இந்த விளையாட்டை ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்யத் தீவிரமாக யோசித்து வருகின்றன.

தற்போது PUBG விளையாட்டை நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாளின் தொலைத்தொடர்புத் துறையின் துணை இயக்குநர் சந்தீப், சிறுவர்களையும், இளைஞர்களையும் அடிமைப்படுத்தும் PUBG விளையாட்டைத் தடை செய்து CIRCULAR அனுப்பியுள்ளோம்.

PUBG தடை நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகள் சொன்ன பேச்சைக் கேட்காமல், அதிக நேரத்தை இந்த விளையாட்டில் செலவழிப்பதாகவும், விளையாட்டுக்கு அடிமையாவதாகவும் தொடர்ந்து புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். விளையாட்டு வினையாகிவிடும் என்று சும்மாவா சொன்னார்கள்???

Top