அப்போ இதுவும் நடிப்பு தான...??
  • 10:26AM Oct 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:26AM Oct 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாம் இன்று பார்க்கும் படங்களில் பல விதமான போதைப் பொருள் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம் ஆனால் உண்மையில் அவர்கள் போதை பொருள்களைப் பயன்படுத்துவதில்லை அதற்கு மாறாக அவர்கள் சில பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் எதைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா..??

கஞ்சா:

கஞ்சா பல நாடுகளில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துவிட்டனர்.படத்தில் அவர்கள் பயன்படுத்துவது ஒரு வகையான தாவரம் ஆகும்.அவை பார்ப்பதற்குக் கஞ்சாவைப் போல் இருக்கும் ஆனால் எந்த விதமான பாதிப்பும் இருக்காது.

கோகேயின்:

பல படங்களில் இதைப் பார்த்திருப்போம் ஆனால் உண்மையில் வைட்டமின் பவுடர் மற்றும் லாக்டோஸ் தூள்களைப் பயன் படுத்துகின்றனர்.

cocaine.jpg

ஹெராயின்:

ஹெராயின் பார்ப்பதற்கு கோகேயின் போலவே இருக்கும். ஹெராயின் பயன்படுத்துவதற்கு மாற்றாகப் பால் பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதை ஊசி வழியாக உடலில் செலுத்துவார்கள் என்பதால் இதற்கு மாற்றாக உள்ளிழுக்கும் ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது.

heroin-.jpg

மேஜிக் மஷ்ரூம்:

இவை காளான் வகையைச் சேர்ந்தது என்பதால் இதற்கு மாறாக ஒரு வகையான காளான்களைப் பயன்படுத்துகின்றனர்.

mushroom.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top