Lushgreen

முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்து சாதனை படைத்துள்ள இப்படி ஒருவரை நீங்கள் பார்த்ததுண்டா ?

Apr 08 2021 12:44:00 PM

மாற்றுத்திறனாளிகள் பலரும் தற்போது பல சாகசங்கள் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றனர். தங்களின் உடலில் தான் ஊனம் இருக்கிறது மனதில் இல்லை என்பதை அடிக்கடி நமக்கு நினைவூட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த பெண் செய்துள்ள சாதனையானது உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

priyanka-sukla

..எஸ் அதிகாரியான பிரியங்கா சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அற்புதமான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒற்றைக்காலுடன் இருக்கும் ஒரு பெண் டெட்லி லிப்ட்ஸ் எனப்படும் அதிக எடை கொண்ட பளுதூக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். தன்னுடைய விடாமுயற்சியால் ஒரு கட்டத்தில் அதை தூக்கி வெற்றியடைகிறார். உடல் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் இவர் செய்துள்ள செயல் அனைவரிடத்திலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

priyanka-sukla

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ..எஸ் அதிகாரி பிரியங்கா சுக்லா கடல் அலைகளை பார்த்து கப்பல் ஒருபோதும் பயப்படுவதில்லை. அப்படி கப்பல் பயப்பட்டால் கடலை கடந்து செல்ல முடியாது. அதுபோலத்தான் தன்னம்பிக்கை உடையவர்களை எத்தகைய சூழலிலும் தோற்கடிக்க முடியாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப் பெண் என்று குறிப்பிட்டுள்ளார்.