Lushgreen

ஆதரவளித்த தாமரை! எதிரியான நிரூப்! பொம்மலாட்டத்தின் விரக்தியில் புலம்பிய பிரியங்கா!

Nov 10 2021 10:35:00 AM

பிக் பாஸின் இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு பொம்மை எடுக்கும் போட்டி வைக்கப்பட்டது. அதாவது போட்டியாளர்களின் பெயர் பொம்மைகளில் ஒட்டப்பட்டிருக்கும். தங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்கக் கூடாது. மாறாக வேறு போட்டியாளர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்கு வரவேண்டும். யார் கடைசியில் வருகிறார்களோ அவரது கையில் இருக்கும் பொம்மையில் யார் பெயர் உள்ளதோ அவர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்படுவார்.

toy-game priyanka-nirub bigg-boss

இந்நிலையில் இந்த பொம்மை போட்டியில் நடந்த முதல் சுற்று சோதனை ஓட்டம் என்று அறிவித்த பிக் பாஸ் பின்னர் மெயின் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது பிரியங்கா பெயர் இடம்பெற்ற பொம்மையை தாமரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றார். வழியில் நிரூப் தாமரையை தடுக்கவே நேரம் போய்க்கொண்டே இருந்தது. இதனால் தாமரை இறுதியாகவே கூடாரத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே தாமரை கையில் இருந்த பொம்மை அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அந்த பொம்மையின் பெயர் பிரியங்கா என்பதால் நிஜத்தில் அவுட் ஆனது பிரியங்கா தான்.

toy-game priyanka-nirub bigg-boss

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பிக் பாஸ் பிரியங்காவிடம் உங்களை ஆதரித்தது யார்? உங்கள் தோல்விக்கு காரணம் யார்? இவ்வாறாக பல கேள்விகளை கேட்கிறார். அதற்கு பிரியங்கா தன்னை ஆதரித்தது தாமரை மற்றும் தோல்விக்கு காரணமாக அமைந்தது நிரூபின் செயல் என்றும் தெரிவிக்கிறார். இதற்கு பதிலளித்த நிரூப் தான் அவ்வாறு ஏதும் செய்யவில்லை, தனக்கு வழங்கப்பட்ட வேலையைத்தான் செய்தேன். மேலும் அந்த பொம்மையில் பிரியங்கா பெயர் இருந்தது எனக்கு தெரியாது என்று கூறுகிறார். எது எப்படியோ பிரியங்கா தோல்வியடைய நிரூப் தான் காரணம் என்று பிரியங்கா தற்போது அவர் மீது கோ பத்தில் இருக்கிறார்.

toy-game priyanka-nirub bigg-boss

அபிஷேக் வெளியேறியதிலிருந்து அமைதியாக இருந்துவரும் பிரியங்கா நேற்று நடந்த இந்த சம்பவத்தால் கொஞ்சம் கோ மாகியுள்ளார். இதனால் அவர் அடுத்தடுத்த நாட்களில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதை சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.