Lushgreen

உள்ளே தாவணி வெளியே பிகினியா ? வீட்டில் பால் குடித்துவிட்டு வெளியே பீர் அடிக்கிறீங்களே !

Apr 05 2021 09:43:00 AM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சேனலில் டாப்பில் சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் இதுவும் ஒன்றாகும். ராஜா ராணி சீரியலில் நடித்து புகழ்பெற்ற சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் பிரியங்கா ஜெயின். கண்மணி என்ற வாய் பேசாத பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.

priyanka-m-jain

மகாராஷ்டிராவில் பிறந்த இவர் பெங்களூரில் படித்து முடித்து மாடலிங் துறையில் நுழைந்தார். சில தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். சீரியலில் பாவாடை தாவணியுடன் பவ்வியமாக காட்சி தரும் இவரின் மறுபக்கம் ஆச்சர்யத்தை தருகிறது. பக்காவான மாடர்ன் பெண்ணான இவருடைய அடக்க ஒடுக்கமான சின்னத்திரை உடையமைப்பு நிஜத்தில் அப்படியே தலைகீழாக இருக்கிறது.

priyanka-m-jain

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இவருடைய புகைப்படங்களை பார்த்தால் திரையில் பார்ப்பதற்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும். தான் நடித்த படங்களிலேயே சில காட்சிகளில் கவர்ச்சி தரிசனம் தந்த பிரியங்கா தற்போது பிகினி படங்களை வெளியிட்டு கவர்ந்திழுக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் பீச் படத்தை பதிவிடக்கோரி வேண்டுகோள் வைத்த நிலையில் அதை நிறைவேற்றும் பொருட்டு சூடான பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சீரியலில் பார்த்த கண்மணியா இது என்று வாயை பிளக்க வைக்கிறது இந்த பிகினி போட்டோ. இந்த புகைப்படங்கள் தற்போது பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.