Lushgreen

ஒத்த படத்துல நடிச்சிட்டு காணாம போன பிரியா இப்போ என்ன பண்ணுறாங்க தெரியுமா? நீண்ட வருடத்திற்கு பிறகு வெளியான அப்டேட்!

Sep 18 2021 04:14:00 PM

தமிழ் சினிமாவுல ஒரு படம் அல்லது இரண்டு மூன்று படங்களுடன் காணாமல் போன நடிகைகள் ஏராளம். அவுங்கள சாட்டிலைட் வச்சி தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறன். அப்படி காணாமல் போன நடிகைகளில் ஒருவர் தான் பிரியா கில்.

priya-gill red-movie-heroine

பெயரை சொன்னால் கூட இவுங்கள கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? அது நியாயம் தான். ஏனெனில் இவுங்க அந்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இத்தனைக்கும் அவுங்க நடிச்ச அந்த ஒரு தமிழ்ப்படம் சூப்பர் ஹிட் படம் வேற. அப்படி இருந்தே இவுங்க பெரிய நட்சத்திரமாக உயர முடியல. சரி இவுங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான்.

priya-gill red-movie-heroine

2002ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ரெட் படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சிங்கம்புலி இயக்கிய இந்த திரைப்படத்தில் அஜித் சூப்பராக நடித்திருப்பார். ஒல்லிக்குச்சி உடம்புக்காரி, கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் என்று இந்தப்படத்தின் பாடல்கள் கூட சூப்பர் ஹிட் அடித்தன. அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரி தான் பிரியா கில்.

priya-gill red-movie-heroine

சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தாலும் இவரை அதன்பிறகு தமிழ்ப்படங்களில் காண முடியவில்லை. தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2006ம் ஆண்டு பைரவி என்ற ஹிந்திப்படத்தில் நடித்தார். இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது.

priya-gill red-movie-heroine

அதன்பிறகு இவர் டென்மார்க்கில் குடியேறியதாக கூறுகின்றனர். தற்போது 45 வயதாகும் பிரியா கில் மாடல் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். இவருடைய வாழ்க்கை இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.