#Priya : மானாக வந்து புலியாக மாறிய நடிகை!!!
  • 12:41PM Nov 08,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:41PM Nov 08,2019 Chennai

பிரியா பவானிசங்கர் ஆரம்பத்தில் புதிய தலைமுறை என்கிற செய்தி சானலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்,பிறகு பிரபல தனியார் தமிழ் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகையாக அறிமுகமானார் அதன் பிறகு இவர் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்தனை தொடர்ந்து, இவர் கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

priya cute.jpg

தற்பொழுது  நடிகை பிரியா பவானி சங்கர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாக உருவாகும் மாபியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் சத்யா என்னும் கதாபத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் தான் பிரியா முதன் முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top