Rainforest

காருக்குள் வைத்து மூச்சு முட்ட முத்தம் கொடுத்த பிரபல நடிகை ! காட்டுத்தீயாய் பரவும் வீடியோ

Apr 05 2021 10:08:00 PM

ஜெய் நடித்த வாமனன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த்.  180, எதிர் நீச்சல், அரிமா நம்பி போன்ற பல படங்களில் நடித்தவர். முன்னணி நடிகர்களுடன் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் தான் நடிக்கும் படங்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்து நடிப்பார் ப்ரியா. நடிப்புத்திறமை மட்டுமல்லாது தன்னுடைய கவர்ச்சியாலும் ரசிகர்களை கொள்ளையடித்தவர். பாடல் காட்சிகளில் அற்புதமான கவர்ச்சியுடன் அழகாக நடனம் ஆடுவதிலும் வல்லவர்.

priya-anand-kiss

தமிழில் தற்போது பிரசாந்த் ஜோடியாக அந்தகன் படத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தற்போது ஒரு அற்புதமான முத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் காருக்குள் அமர்ந்து கொண்டு ஒருவருக்கு மூச்சு முட்ட முத்தமழை பொழிந்து தள்ளுகிறார் ப்ரியா. உடனே யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று நினைக்க தோன்றுமே.

priya-anand-kiss

அது வேறு யாருமல்ல ஒரு சாதாரண சிறுமி. அந்த சிறுமிக்கு ஏகப்பட்ட முத்தங்களை கொடுத்து அவர் பதிவிட்டிருக்கும் வீடியோ பல லைக்குகளை அள்ளி வருகிறது. அந்த குழந்தை இருந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் ஏங்கி தவிக்கின்றனர்.

priya-anand-kiss

மிர்ச்சி சிவாவுடன் அவர் நடித்துள்ள சுமோ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது தவிர எல்.கே.ஜி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆர்.ஜெ.பாலாஜியுடன் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் ப்ரியா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.