Misc

எல்லா தனியார் பள்ளிகளும் நகரத்தை விட்டு தொலைதூர காடுகளில் கட்டப்படுவது ஏன்? அவங்க எல்லாம் புத்திசாலித்தனமா தான் யோசிக்கிறாங்க! மக்கள் தான் மு ட்டாள்களா ஓடிப் போய் அங்க குவியுறாங்க!

Apr 29 2021 01:19:00 PM

பொதுவாக அரசுப் பள்ளிகள் எப்போதும் நகரத்திற்குள்ளே மக்கள் வந்து போகும் இடங்களில் தான் இருக்கும். இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சுலபமாக பள்ளிக்கு சென்று வருவார்கள். ஆனால் இந்த தனியார் பள்ளிகள் மட்டும் எப்போதும் சிட்டியில் இருந்து பதினைந்து முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆள் அரவமற்ற காடுகளில் கட்டப்பட்டிருக்கும். இதுக்கு என்னதான் காரணமாக இருக்கும் என்று என்றாவது யோசித்திருப்போமா?

provate school building city outside

இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஒன்னு அது அவங்க சொந்த இடமாக இருக்கலாம். அந்த சொந்த இடத்தில் பிளாட் போட்டால் சுத்தமாக விற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கலாம். தண்ணீர் பிரச்சனை, யாரும் அங்கு குடி ஏற முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கலாம். இதற்காகவே அவர்கள் அங்கே பள்ளிக்கூடம் கட்டி இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

provate school building city outside

நீங்க எந்த தொழில் செய்தாலும் அதில் ந ஷ்டம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் கல்வித் தொழிலில் எப்போதும் ந ஷ்டம் ஏற்பட வாய்ப்புகளே இல்லை. கோடி கோடியாய் மக்கள் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைக்க தயாராக இருக்கிறார்கள். மக்களுக்கு தேவை தரமான கல்வி மட்டுமே. அந்த தனியார் பள்ளிக்கூடம் நகரத்தில் இருக்கிறதா, காட்டில் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்.

provate school building city outside

மற்றொரு காரணமும் உள்ளது. நகரத்துக்குள்ளேயே பள்ளிகளை அமைத்து விட்டால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவர்கள் வேலைக்கு செல்லும்போது வந்து தங்கள் வாகனத்திலேயே விட்டுவிட்டு செல்வார்கள். அதுவே சிட்டியில் இருந்து வெகு தொலைவில் இருந்தால் மக்களால் தினமும் குழந்தையை கூட்டிச் செல்வது ரொம்ப க ஷ்டம். எனவே ஸ்கூல் பஸ்சில் அனுப்பலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்கூல் பஸ்சில் அனுப்பவேண்டும் என்றே சிட்டியில் இருந்து வெகு தொலைவில் பள்ளிக்கூடங்களை கட்டுகிறார்கள் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இப்போதுள்ள காலகட்டங்களில் ஸ்கூல் பீஸை விட ஸ்கூல் பஸ் கட்டணம் தான் அதிகமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் எந்த த வறும் இல்லை.

provate school building city outside

அரசு பள்ளிகளும் தற்போதுள்ள காலகட்டங்களில் அனைத்து வசதிகளுடனும் நிறைய தொழில் நுட்பங்களுடனும் தனியாருக்கு போட்டிபோட்டுக்கொண்டு கல்வி சேவை செய்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்னர் உங்களால் கடைசி வரை இந்த செ லவுகளை சமாளிக்க முடியுமா என்று யோசித்து செயல்படுவது சிறந்த முடிவாக இருக்கும்.

provate school building city outside