#MUSHROOM: கறிக்கு அடுத்தபடியான சிறந்த உணவான காளானை எப்படிச் சாப்பிடுவது நல்லது???
  • 15:33PM Jul 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:33PM Jul 05,2019 Chennai

வாரா வாரம் பெரும்பாலும் கறி எடுத்தாலும், சில நாட்களில் அதற்குப் பதிலாக நாம் பயன்படுத்துவது காளானைத்தான். காரணம், சுவை மட்டுமல்ல, உடலுக்கு நல்லதும் கூட என்பதால். இருந்தாலும், சரியாகக் கையாளத் தெரியாவிட்டால், அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரை கூட ஏற்படுத்தக் கூடியது இந்தக் காளான். இதை எப்படி உடலுக்குப் பாதிப்பு வராமல் நல்ல விதமாகப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோமா???

#1. காளானைச் சுத்தப்படுத்தும் முன்பு, அதனைச் சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறைக் கலந்தால், எலுமிச்சையில் உள்ள CITRIC ACID, OXYGEN-டன் கலந்து காளான் கறுப்பாவதைத் தடுத்துவிடும்.

#2. சுத்தப்படுத்திய காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்த பின்னரே சமைக்க வேண்டும்.

#3. PACKET-ல் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை FRIDGE-ல் வைத்து உபயோகப்படுத்தலாம். FREEZER-ல் வைக்கக்கூடாது.

#4. திறந்து வைக்காமல், ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்.

#5. காளான் நிறம் மாறினால் பெரிதாகப் பிரச்சினையில்லை. ஆனால், தொடும்போது பிசுபிசுப்பாக உணர்ந்தால், கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

#6. காளானை நன்றாகச் சமைத்த பிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும், அதனை அனைவரும் சாப்பிட முடியாது.

#7. SKIN ALLERGY இருப்பவர்கள், காளானைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்பு போன்றவை ஏற்படலாம்.

#8. காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

#9. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Child Growth Foods  |  Eating Live Octopus  |  Cooking Asari Kari  |  Depression Causes Obesity  |  Reduce Obesity Naturally  |

#MUSHROOM என்பது என்னதான் சுவையாக இருந்தாலும், அது சில நேரங்களில் உடல் நலத்திற்குப் பெரிய தீங்கு ஏற்படுத்திவிடும். அதனால், அதைச் சமைக்கும் போதும் சரி, உண்ணும் போதும் சரி, சற்று ஜாக்கிரதையாக இருங்கள். காளான் சாப்பிட்டு வயிற்று வலி ஏற்பட்டால், சில நாட்கள் தொடாமல் இருப்பது கூடுதல் நலம்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top