Lushgreen

சூப்பர் ஸ்டாராக மாறி இருக்க வேண்டிய பிரஷாந்த் இப்போ யாரென்றே அடையாளம் தெரியாமல் மாறியதற்கு என்ன காரணம்?

Apr 28 2021 03:28:00 PM

தமிழ் சினிமாவில் இப்போதாங்க விஜய், அஜித் எல்லாம் சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி இருக்கும்போதே அவருக்கு போட்டியாக நிறைய படங்களில் நடித்தவர் தான் நடிகர் பிரஷாந்த். தமிழ் சினிமாவின் ஆணழகன் என்றே அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது விஜய், அஜித் போன்றோர் இப்போ இருக்கும் ஜெய் நடிகரைப்போலவே சாதாரண நடிகராக இருந்துவந்தார்கள்.

prashanth movie tamil anthathun

சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒரு பிரபலம் திடீரென ஆள் அட்ரஸ் தெரியாமல் போக என்ன காரணம்? பிரஷாந்த்தின் இந்த நிலைமைக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. இவருடைய சம்பளத்தை உயர்த்தியதால் இவரை புக் செய்ய எந்த தயாரிப்பாளரும் விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. வேறு யாரும் இவரை வைத்து படம் எடுக்காததால் இவருடைய தந்தையே தனது சொந்த ப்ரொடக்சனில் படம் எடுத்ததால் ந ஷ்டம் அடைந்தார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

prashanth movie tamil anthathun

இந்த இரண்டு காரணங்களை விட இன்னொரு காரணம் மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இவர் கிரஹலக்ஷ்மி என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்தார். திருமணம் செய்த பிறகுதான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை பிரஷாந்திற்கு தெரியவந்தது. இந்த குடும்ப பிரச்சனை காரணமாகத்தான் பிரசாந்த் சினிமாவில் நடிக்க முடியாமல் வாழ்க்கையை தொலைத்தார் என்றும் பிரஷாந்த்தின் நெருங்கிய வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியோ இவர் தற்போது அந்தாதூன் என்ற ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

prashanth movie tamil anthathun

இந்த படத்தை தான் அவர் மலை போல நம்பி இருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றால் அவரின் சினிமா எதிர்காலம் கேள்விக்குறிதான் என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

prashanth movie tamil anthathun