இந்தியாவில் வறுமைலயில்லா கிராமம்….
  • 11:39AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:39AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்று இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக நான்கில் ஒருவர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அனல் ஒரு கிராமத்தில் ஒவொரு குடும்பத்தில் மாத வருமான 30000 என்றால் நம்ப முடிகிறதா.ஆம் ஹிவாரே பஜார் எனும் கிராமத்தில் தான் இத்தகைய ஆச்சரியம் நடந்துள்ளது.

  India-poverty-church-planting-IMB.jpg

மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் தான் ஹிவாரே பஜார் எனும் கிராமம்.1990 வரை வறட்சி நிறைந்த இடமாக இருந்த கிராமமாக தான் இருந்துள்ளது.கிராமவாசிகள் அனைவரும் ஊர்விட்டு வெளியேறி உள்ளனர் .பின்னடைவில் வெளியேறியவர்கள் மெல்லத் திரும்ப தொடங்கினர்.1992 -2002 இந்தக் காலத்தில் மட்டும் 40 குடும்பங்கள் மீண்டும் குடியேறினர்.hiware-bazaar-1-638.jpg

வறட்சியின் விளிம்பில் இருந்த இவர்கள் 1990 ஆம் ஆண்டில் போபற்றையோ பவார் என்பவரை ஊர்த் தலைவராக நியமித்தனர். அவரின் அறிவுரையால் அரசாங்கத்தின் சலுகைகளை கொண்டு மீண்டும் இழந்த பொழிவை அடையப் போராடினர். இவர்கள் தண்ணீர் பற்றாக்குறையை அறிந்து அதற்கேற்ப பயிரிட்டனர். சொட்டு நீர் பாசகம் திட்டத்தை முறையே பயன்படுத்தினர். மேலும் பல கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர். இந்த ஊரில் முதலில் மதுவை ஒழித்தனர், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஆதரித்தனர். திருமணத்திற்கு முன்பு HIV சோதனை செய்த பிறகே திருமண நடைபெறும். இதை மக்கள் அனைவரும் ஆதரித்தனர். 1995 ஆம் ஆண்டு நாள் ஒன்றிற்கு 150 லிட்டர் பாலை உற்பத்தி செய்தனர் இன்று நாள் ஒன்றிற்கு 4000 லிட்டர் வரை உற்பத்தி செய்கின்றனர்.

img79.jpg

அரசாங்கத்திடம் பல விருதுகளை இந்தக் கிராமம் பெற்றுள்ளது. 1995 இல் 182 குடும்பங்களில் 168 குடும்பங்கள் வறுமைக் கோட்டின்கீழ் இருந்துள்ளனர் ஆனால் இன்று வெறும்குடும்பங்களே வறுமையின் கோட்டிற்கு கீழ் உள்ளனர் அதில் 50 கும் மேற்பட்டோர் கோடீசுவரர்களாக உள்ளனர்.

27604829886_1a80d60a84.jpg

வறுமையின் விளிம்பில் உள்ள பல கிராமங்களுக்கு ஒரு முன்னோடியாக  உள்ளது இந்தக் கிராமம். தம்மிடம்  தண்ணீர் இல்லை என்று கவலைப்படாமல் அதற்கேற்ப திட்டங்களை வகுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்தக் கிராமத்தை ஒரு முன்னோடியாக வைத்து நாமும் ஒரு புதிய பாதையை அமைப்போம் வெற்றி பெற உழைப்போம்

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top