Timeless

கடலில் சிறுநீர் கழித்தால் கண்டம் பண்ணிடுவாங்க! கடுமையான சட்டத்தின் மூலம் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்கும் நாடு!

Oct 01 2021 11:12:00 AM

அவசரமாக வருகிறது அடக்க முடியவில்லை என்று சொல்லி பலரும் தெருவிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் எல்லாம் நம் நாட்டில் மட்டுமே அரங்கேறும். ஆனால் வெளிநாடுகளில் பல கடுமையான சட்டங்களை இயற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாமலும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் நம் நாட்டிலும் அமல்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறன்.

portukal-beach important-rules

போர்ச்சுகல் நாட்டைப்பற்றி பலரும் அறிந்திருப்பீங்க. அங்கு பல்வேறு அதிசயங்கள் இருக்கிறது. கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டார் ரொனால்டோ பிறந்த நாடு. அதையும் தாண்டி பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது போர்ச்சுகல். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற ஐரோப்பிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அப்படிப்பட்ட போர்ச்சுகலில் ஒரு முக்கியமான சட்டம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.

portukal-beach important-rules

போர்ச்சுகலை பொறுத்தவரையில் அவர்கள் கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். ஏனென்றால் கடற்கரையில் நம்ம ஆளுங்க அடிக்கும் லூட்டியை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே. நம் நாட்டின் சில கடற்கரைகளில் மக்கள் சிறுநீர் கழிப்பது போன்ற சில முகம் சுளிக்கும் சம்பவங்களைக்கூட செய்வாங்க. இதனால் பல்வேறு சுற்றுலா பயணிகளும் நாட்டு மக்களைப்பற்றி மோசமாக நினைக்கிறாங்க.

portukal-beach important-rules

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதில் போர்ச்சுகல் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருக்கிறது. இவர்களுடைய நாட்டில் கடற்கரை மற்றும் கடல் நீரில் சிறுநீர் கழிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கடலில் சிறுநீர் கழிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து அந்த சட்டத்தை பின்பற்றுமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும்.

portukal-beach important-rules

இந்த விஷயம் குறித்து தெரியாமல் போர்ச்சுகல் நாட்டுக்கு சென்று நீங்கள் கடலில் சிறுநீர் கழித்தால் உங்கள வச்சி செஞ்சிடுவாங்க. நம்ம ஊரு குளம் குட்டையில் குளிக்கும்போது சிறுநீரை வெளியேற்றுவது போல இவுங்க நாட்டுல இருக்கும் கடற்கரையில் சம்பவம் செஞ்சுடாதீங்க மக்களே. போர்ச்சுகலுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்த விஷயத்தை உங்க மண்டையில ஏத்திக்கிட்டு அப்புறம் புறப்படுங்க.

portukal-beach important-rules

அதுக்காக உங்களுடைய இயற்கை உபாதையை அடக்கிக்கொண்டு சிரமத்தை அனுபவிக்க வேண்டியதில்லை. நீங்க சிறுநீர் கழிப்பதற்காக கடற்கரையில் பாத்ரூம், பொது கழிப்பறை போன்ற வசதிகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒகே. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டும் தெளிவாகவில்லை. கடற்கரையில் சிறுநீர் கழித்தால் கண்டுபிடித்து விடலாம். கடலில் சிறுநீர் கழிப்பதை எப்படி கண்டுபிடிப்பாங்க? கடலுக்குள்ள எந்த இடத்துல கேமிரா வச்சிருப்பாங்க என்று தான் புரியவில்லை.