கல்லா கட்டும் நக்கீரன் கோபால்..! கதறும் பொள்ளாச்சி : விழிப்புணர்வு வீடியோ என்று வெளியிட்டு தேடிக்கொண்ட விபரீதம்..!
  • 10:46AM Mar 15,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:46AM Mar 15,2019 Tamil Nadu

your image

 

பொள்ளாச்சி பிரச்சனை பலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் அப்பகுதி மக்களுக்கு இது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகமாகி விட்ட பிரச்சினை. சொல்லப்போனால் பொள்ளாச்சிக்காரர்கள் இதனை ஒரு பக்கம் மனதில் போட்டுகொண்டு குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உதவி வந்தனர். இந்த பிரச்சனை மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு , சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்டு , அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் பிரச்சனை எழுகிறது என்றால் காரணம் திமுக தான்.

இந்த பிரச்சனையில் எப்படியாவது அரசியலை  உள்ளே இழுத்து விட்டு கொங்கு மண்டலத்தில் தற்போது அதிமுகவுக்கு இருக்கும் இமேஜை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டோடு இந்த வேலைகள் செய்யப்படுகின்றன. இதனால் தான் ஒரு இளம்பெண்ணின் வீடியோவை முகத்தை கூட மறைக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளார் நக்கீரன் கோபால். காவல்துறையே கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை சீலிட்டு கொண்டு செல்லும் போது, இவருக்கு எப்படி வீடியோ கிடைத்திருக்கும். அதனால் விழிப்புணர்வு ஏற்பட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அதுவே பல பெண்களின் உயிரை எடுக்க காரணமாக அமைய போகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? இப்படி நமது வீடியோவும் வந்து விடுமோ என்ற பயத்தில் பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை எத்தனையோ அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். ஆனால் மேம்பால ஊழல் வழக்கில் அதிமுக ஆட்சி காலத்தின் போது கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதை திமுக தன்னுடைய ஊடக பலத்தின் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக முன் வந்து புகார் கொடுக்காமல் அரசு என்ன செய்ய முடியும்..? ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது. வழக்கு நடக்க இருக்கிறது.

இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் யாரை எதிர்த்து போராட்டம்? அந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்களா? இல்லை யாராவது தப்பி விட்டார்களா? அப்படி இருக்க எதை நோக்கி இந்த போராட்டம்.? இதைத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணும் , அவருடைய அண்ணன் கேட்கிறார்கள். இப்போது அந்தப் பெண்ணுடைய வழக்கறிஞரும், அந்தப் பெண்ணுக்கு முதன்முதலாக உதவி செய்த மலுமிச்சம்பட்டி பழனிச்சாமியும் கேட்கிறார்கள். இது இப்போது ஊடகங்கள் மூலமாக உறுதியாகிவிட்டது.

போராட்டம், வீடியோ வெளியானது எல்லாம் முழுக்க முழுக்க திமுகவால் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் வேலை. கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் குற்றவாளிகள். அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை உடனடியாக தூக்கில் தொங்க விட்டாலும் சரி. அல்லது கோவையில் நடந்தது போல என்கவுண்டர் செய்யப்பட்டாலும் மக்கள் வரவேற்பார்கள்.

ஆனால் , இதையே காரணமாக வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முற்படுவதை ஏற்கவே முடியாது. காரணம் திமுக கொங்கு மண்டலத்தின் மீது அந்த அளவு வெறுப்பில் இருக்கிறது. ஏதாவது செய்து மீண்டும் எங்கு காலூன்றி விட முடியாதா என்று துடிக்கிறது. அதன் வெளிப்பாடாக தான் ஆளும் கட்சிக்கு எதிராக தன்வசம் உள்ள ஊடகங்களை வைத்து ஸ்டாலின் மருமகன் வதந்தி செய்திகளை பரப்பிய விவகாரத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இனியாவது மக்கள் எப்பொருளை யார் யார் வாயில் இருந்து கேட்டாலும், அப்பொருளின் மெய் பொருளை காண முற்பட வேண்டும்.

Share This Story

முருகானந்தம்

Top