சாலையோரத்தில் திருநங்கையுடன் உல்லாசம் அனுபவித்த காவலர்!
  • 18:05PM Dec 05,2018 Chennai
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 18:05PM Dec 05,2018 Chennai

துரைப்பாக்கத்தில் இரவு வேலை செய்யவேண்டிய காவலர் ஒருவர் திருநங்கையுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை சில திருநங்கைகள் சாலையோரத்தில் நின்று வாகன ஓட்டிகளை அரை நிர்வாண ஆடைகள் அணிந்து கவர்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தப் பகுதி காவல் துறையினரும் இதைக் கண்டுகொள்வதில்லை. அங்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கரணை வனப்பகுதியில் இந்தத் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டும் வருவதாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில் அந்தப் பக்கம் போகும் வாகன ஓட்டிகளிடம் இவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for police having sex with transgender in thoraipakkam

இந்நிலையில் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்துவரும் சதீஷ் சத்தியராஜ் என்பவர் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள புதர்பகுதியில் திருநங்கை ஒருவருடன் சீருடையில் இருக்கும் போதே உல்லாசமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆட்கள் வருவதைப் பார்த்து பதறி அடித்து சேற்றில் விழுந்து ஓடியுள்ளார் சதீஷ், ஆனாலும் வாகன ஓட்டிகள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அவரை பள்ளிக்கரணை காவலர்களிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் தற்போதைக்கு சதீஷை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.

Top