#police : ஒரு குடும்பத்தை நாடு ரோட்டில் கதற வைத்த காவல் துறை !!!
  • 12:59PM Oct 15,2019 Chidambaram
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:59PM Oct 15,2019 Chidambaram

இன்றைய கால கட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பம் போக்குவரத்திற்காக வாங்கும் ஒரே  வாகனம் இரு சக்கர வாகனம் தான் ஏனென்றால் அதுதான் அவர்களால் விலைகொடுத்து வாங்க முடியும் கார் என்பது கனவே ஒரு சிறு குடும்பம் என்றாலே கணவன் மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் தான் அவர்கள் வெளியே செல்லும் பொழுது 4 பெரும் தான் செல்ல வேண்டியுள்ளது அப்படி சென்ற ஒரு குடும்பத்தை சட்டம் தனது கடமையை செய்து நடு ரோட்டில் கதற வைத்தது அதனை பற்றி இப்பதிவில் பார்ப்போம்

chidambaram police.jpg

கடலூர் மாவட்டத்தில்  உள்ள  சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி முனை என்கிற இடத்தில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகிய 2 பேரும் அவ்வழியே  இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். இரு  சக்கர வாகனத்தில் இரண்டு பேர் தான் வரவேண்டும், ஆனால் நீங்கள் நன்கு  பேர் வந்ததாக  கூறி அபராதம் விதித்துள்ளனர்.அதற்கு அந்த வாகனத்தை ஓடிவந்த நபர் , குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வரமுடியாது என்று பதிலளிக்கிறார்.

மேலும், தங்களை செல்ல அனுமதிக்கும்படி வாகன ஓட்டியின் மனைவியும் காவல்துறையினரிடம் கெஞ்சுகிறார். இதைப்பார்த்த  அவர்களின் குழந்தைகள் அழத் தொடங்கினர். அசல் ஆவணங்கள் கொடுத்தால் தான் உங்களை செல்ல அனுமதிப்போம் என காவல்துறையினர் கெடுபிடி காட்டுகிறார்கள்.இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது இதை பார்த்த பலரும் தங்களின் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top