தணலாடிய பிஞ்சு…
  • 14:17PM Oct 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:17PM Oct 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

 

பற்றித்தான் எரிகிறது

எம் தேசத்தின் குழந்தைகளெலாம்…

முன்பொரு மர்மக் காய்ச்சல்,

நேற்றொரு டெங்கு –

மரணித்த பின்தான் எரிய விட்டன

எம் பிஞ்சுகளை…

 

இன்றோ –

தகப்பனே சிதையிட,

தாயும், தகப்பனும், அண்ணனும்

கருகிச் சாய்ந்திட கண்டதொரு

பிஞ்சு –

தானும் தணலாடி…

 

உயிருடைமை தொலைத்து

நமதுடமை தேடி –

பிறருடமை பறித்துப் பழகி…

 

உயிரைக் கூட வாங்கிப்

பழகியது –

பணம்…

 

உமக்காய் நியாயம்

கேட்க –

கூக்குரலும் கேளாச் செவிகள்

முன்…

 

மாறிப் போன நியாயங்களின்

சில பல எச்சங்கள்

பழிக்கிறது –

உன்னையும், என்னையும்

காப்பாற்றுவதாகச் சொன்ன

சாமிகளை…

 

கும்பிட்டவன்

என்ன செய்தாலும்

வாழலாம் எனக்

கடவுளே நிறம் மாறிய

பிறகு…

 

உயிர்க் கொள்ளியாய்

வீழ்வதைத் தவிர –

வேறெதையும், வேறெதையும்

அளிக்கவொண்ணா பாவிகளாய் –

அனைவரும்…

 

கையோடு கருகிய

திண்பண்டத்தின் எச்சத்தை

போகும் வழியில் –

அந்தக் கடவுளிடம்

கொடுத்துப் போ…

 

இனியேனும்

விழித்தெழந்து,

தர்மம் காக்கிறதா

பார்ப்போம்…

  • கே.வி.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top