இளையராஜாவுக்காக எங்களை ஜெயிக்கவையுங்கள்! - பாமகவின் பாலிடிக்ஸ்
  • 16:38PM Mar 15,2019 Tamil Nadu
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 16:38PM Mar 15,2019 Tamil Nadu

நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், சிறிது நேரம் இளையராஜாவின் இசையைக் கேட்டால் போதும், 10 நிமிடத்தில் மறைந்த சந்தோசம் மீண்டும் வந்துவிடும். மக்கள் மனதில் பல பிரிவினைகள் இருந்தாலும், இளையராஜாவின் இசைக்கு அனைவரிடத்திலும் தனி மரியாதையை இருக்கும், ஆனால் அந்த மரியாதையை அரசியலாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது பாமக கட்சி! அதிமுக-பாஜக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பாமக கட்சி, இன்று அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலை, தேர்தல் சீர்திருத்தங்கள், சுயமரியாதை திருமணம், கட்சத்தீவு மீட்பு என 37 அம்ச தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Image result for ilayaraja

இதில் அரசியலுக்கும், மக்களின் நல் வாழ்வுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லாத, அரசியலுக்கு அப்பாற்பட்டவரான இளையராஜாவுக்குப் பாரத ரத்னா வாங்கித் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் வாக்குறுதியில் 28-வது அம்சமாக இதைத் தெரிவித்துள்ளனர். பல விருதுகளைப் பெற்ற இளையராஜாவுக்கு இந்தப் பாரத ரத்னா கிடைக்காவிட்டாலும் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் இதை ஒரு வாக்குறுதியாகப் பாமக அறிவித்திருப்பது ஏன்னென்று தெரியவில்லை! இதேபோல அதிமுகத் தொண்டர்களைக் கவரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா வாங்கித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இது அதிமுகத் தொண்டர்களைக் கவருவதற்கா? அல்லது கூட்டணிக்காகவா? என்று தெரியவில்லை!

Tags

Share This Story

Top