ஏப்ரலில் வெளியாகும் மோடி திரைப்படம்! வலுக்கும் எதிர்ப்பு!
  • 10:59AM Mar 16,2019 Mumbai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 10:59AM Mar 16,2019 Mumbai

ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், தற்போதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டமாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கும்.

Image result for modi movie

தேர்தல் முடியும்வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன, அதேபோல அரசியல் கட்சியைச் சேர்த்தவர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு மேல் எடுத்து செல்ல கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகிலேயே தேர்தல் நேரத்தில் மிகப் பெரிய விளம்பரமாக ஓமங் குமாா் இயக்கத்தில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்திருக்கும், "பி.எம் நரேந்திரமோடி" திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் மக்களின் நிலைப்பாட்டை இந்தத் திரைப்படம் குழப்பும் என்று கருதுகின்றனர். மேலும் தேர்தல் நடக்கும் சமயத்தில் இந்தத் திரைப்படம் பிரதமருக்கு விளம்பரம் செய்வதுபோல் உள்ளது, இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Top