பார்த்து சத்தியம் செய்யுங்க பாய்ஸ்…
  • 06:56AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 06:56AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

 

       வணக்கம்.  இதுக்கு முன்னாடி முரட்டுப் பீசு ன்னு ஒரு கட்டுரைல இருந்துச்சே, அதே முரட்டுப் பீசுதான்.  ஊருக்குள்ள நம்ம தெள்ளவாரித்தனம் ரொம்ப ஓவராப் போனதால எங்கம்மா செம்மையா காண்டாய்டுச்சு… விடிய விடிய வீட்டுக்கு வராம சுத்தறது, எப்பப் பாரு பிரச்சினை. பஞ்சாயத்துன்னு போறதுன்னு ஒரு ரேஞ்சாத்தான் போயிட்டிருந்துச்சு வாழ்க்கை.  ஏதோ விட்ட குறை தொட்ட குறைன்னு நான் என் அத்தை பொண்ணு கூடவே செட்டிலாய்டலாம்னு முடிவு பண்ணி அதுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.  கொஞ்சம் சின்சியராவே போய்ட்டேன்னு கூடச் சொல்லலாம். 

       ஒரு நாளு எங்க ஊரு பக்கம் இருக்கிற டேம்ல கொஞ்சம் பெரிய ஆளுங்க கூட பிரச்சினையாய்டுச்சு.  அவங்க ஒரு பத்து பேரை வரச் சொல்லி எங்களை ரவுண்ட் கட்ட, நாங்க எதிர்பாராம நம்ம க்ளாஸ்மேட்ஸ் ஒரு நாப்பது பேரு தற்செயலா அங்கு வந்து சேர… திடீர்னு விளையாட்டு போக்கு மாறிடுச்சு.  அடிச்ச உடனே கீழே ஓடி, கிடைச்ச பஸ்ல ஏறி அவங்கவங்க இடத்துக்கு எஸ்கேப் ஆயிட்டோம்.  அது போலீஸ் கேஸ் ஆகி, எங்களைத் தேடிப் பிடிச்சாலும் – ஸ்டேஷன் வாசலுக்குள்ள போறதுக்குள்ள வெளியே வந்துட்டோம்.  எங்கம்மா இதுலதான் செம காண்டாய்டுச்சு…

       நான் நாள் பூரா வீட்டுல என்ன கேட்டா என்ன சொல்லாம்னு ப்ளான் போட்டு வீட்டுக்குப் போனா எங்கம்மா கோவிலுக்குப் போகனும்னு கூப்பிட்டாங்க.  சரி, அங்க வச்சுத்தான் க்ளாஸ் ஏடுப்பாங்க போலன்னு கூடக் கிளம்பினேன்.  உள்ளே போனதும், “எனக்கு மூணு விஷயம் பிடிக்கலை… நீ பொய் பேசுறது, உன் பிரெண்ட்ஸ், அப்புறம் இந்த அடிதடி… எனக்காக இந்த மூணுல ஏதாவது ஒன்னை நீ விட்டுடறேன்னு உன் முறைப் பொண்ணு மேல சத்தியம் பண்ணு…” - ன்னு கார்னர் பண்ணிட்டாங்க… விடுவோமா???  சொந்தத் தொழில் பண்றதால பொய் சொல்லாம இருக்க முடியாது.  அடிதடி, நாம இல்லைன்னாலும் பசங்கள வச்சுப் பார்த்துக்கலாம், ஸோ, பசங்க வேணும்னு யோசிச்சு அடிதடியை விட்டுடறேன்னு சத்தியம் பண்ணிட்டேன்.

       அப்புறம்தான் ஆரம்பிச்சுது எனக்கு ஏழரை. பசங்க கிட்ட அவனை அடிடான்னு சொன்னா, நீ முதல்ல கை வைன்னு என்னையே கோர்த்து விட்டாங்க.  முதல்ல வாங்குனவனெல்லாம் சாப்டாய்ட்டான்டான்னு பார்க்கிற இடமெல்லாம் வம்பிழுக்க ஆரம்பிச்சாங்க. போங்கடான்னு சொல்லிட்டு வேலையை விட்டு எங்கேயும் போகாம கடையிலேயே உட்கார்ந்ததால, பசங்க கூடவும் போக முடியலை… எங்கேயும் எஸ்கேப் ஆக வேண்டிய தேவை இல்லாததால பொய் பேசறதும் படிப்படியா குறைஞ்சிடுச்சு…  அந்தப் பொண்ணுக்கு அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு கல்யாணம் ஆச்சு… எங்கம்மாதான் ஜெர்க் ஆனாங்க… மறுபடி அடிதடின்னு போயிடுவேனோன்னு… சத்தியம் பண்ணினது பண்ணினதுதான்னு நான் தெளிவா சொன்னப்புறம்தான் நார்மலானாங்க.

       இதுல செம கூத்து என்னன்னா, சத்தியம் பண்ணினப்போ நான் ஒரு தீவிர நாத்திகன், ரெண்டாவது அந்தப் பொண்ணுக்கு இன்னைக்கு வரைக்கும் இந்த விஷயம் தெரியாது.  அதனாலதான் சொல்றேன், வீட்டுல திடீர்னு சத்தியம்னு கேட்டாங்கன்னா உடனே பண்ணிடாதீங்க… ஏன்னா எங்கம்மாவுக்கு பின்னாடி ஒரு மாஸ்டர் ப்ரெய்ன் (இன்னைக்கு வரைக்கும் யாருன்னு கண்டுபிடிக்க ட்ரை பண்றேன், சிக்க மாட்டேங்குறான்) உங்க வீட்டு ஆளுக பின்னாடி கூட இருக்கலாம்.  ஜாக்கிரதையா இருங்க… ஏன்னா, இன்னைக்கு சந்தோஷமாயிருக்கேன்தான்… ஆனா முதல் ரெண்டு வருஷம் நான் பட்டபாடு – என்ன நான் சொல்றது???               

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top