Shoreline

முடிந்தவரை இதனை தவிர்க்கலாமே! முடியவில்லை என்றால் நமக்கு முடிவு தான்!

Apr 05 2021 10:05:00 AM

பிளாஸ்டிக் பொருட்களினால் தீமை என்று தெரிந்தும் அதை இன்னமும் உபயோகப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். கவர், கப் , பை என்று ஏதாவது ஒரு வகையில் பிளாஸ்டிக் தினமும் நம்மை சுற்றித்தான் வந்து போகிறது. இதை தடுக்க என்ன மாற்று வழிகளை பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் .

plastic-garbage

பிளாஸ்டிக் பொருட்களின் அளவுக்கு அதிகமான பயன்பாடு கடல்களில் டன் கணக்கில் குப்பைகளாக சேர்ந்து நீர் வாழ் உயிரினங்களை அழித்து வருகிறது. எனவே இப்போது நாம் மாற்று வழிகளை சிந்தித்தாக வேண்டும். பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்துவதற்கு பதில் வேறு ஸ்ட்ரா பயன்படுத்தலாம். அல்லது அப்படியே கோப்பையில் கூட பழச்சாறு பருகுவதும் சிறந்தது தான்.

plastic-garbage

வீட்டிலோ அல்லது வெளியிலோ எங்கு சென்றாலும் பிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் கண்ணாடி அல்லது பீங்கான் டம்ளர்களை பயன்படுத்தலாம். காதுகளை சுத்தப்படுத்தும் பட்ஸ்கள் உடலுக்கு ஆபத்தானது. அதிலும் பிளாஸ்டிக் கலந்திருக்கிறது. மளிகை கடைக்கு செல்லும் போது ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி பயன்படுத்துங்கள். இதனால் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை கணிசமாக குறைக்க முடியும். 100 கிராம் அல்லது 1 கிலோ எந்த அளவாக இருந்தாலும் கடைகளில் பிளாஸ்டிக் கவரில் தான் கட்டி தருவார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று முறை கடைக்கு சென்று வாங்கினால் அதிக அளவில் பிளாஸ்டிக் கவர் குப்பைகளாக சேரும்.

plastic-garbage

எங்கு சென்றாலும் கையில் துணிப்பை ஒன்று எடுத்துச்செல்வது நல்லது. இதனால் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக்கட்ட முடியும். காய்கறி மற்றும் பழங்கள் வாங்க சென்றால் துணிப்பை அல்லது கூடைப்பை எடுத்து செல்லுங்கள். பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை குடிக்காமல் ஸ்டீல் அல்லது செம்பில் உருவாக்கப்பட்ட பாட்டில்களை பயன்படுத்துங்கள்.