tour plan-னா இப்ப அங்க மட்டும் போயிராதீங்க..! நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்குகிறது.!
  • 14:02PM Jan 03,2019 Kodaikanal
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:02PM Jan 03,2019 Kodaikanal

your image

 

 

முந்தைய வருடங்களை போல இல்லாமல், இந்த வருடம் குளிர் சற்று தூக்கலாகவே உள்ளது. பொதுவாக அதிகாலையில் பைக்கில் சென்றால் தான் உடல் ஆட்டம் காணும். இப்போது இரவில் இருந்தே பனிப்பொழிவு தொடங்கி விடுகிறது. சுவாச தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் ரொம்பவே அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் கோடைகால சுற்றுலா தளமான கொடைக்கானல் கடுமையான குளிரில் சிக்கி தவிக்கிறது. ஜீரோ டிகிரி வெப்பநிலையில் தற்போது கொடைக்கானல் காஷ்மீரைப் போல காட்சியளிக்கிறது. ஜீரோ டிகிரி ஐயும் தாண்டி மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. புல்வெளிகள் வெண்மையாக பனி உறைந்து கிடக்கின்றன.

கடுமையான குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த சூழலை மிகவும் ரசிக்கின்றனர். மதியம் 2 மணி வரை வெயில் அடிக்கிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவ தொடங்கிவிடுகிறது.

இது தொடர்பாக கொடைக்கானல் பகுதி மக்கள் கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுகிறது. இந்தக் குளிர் தாங்காமல் இலைகள் எல்லாம் கருக ஆரம்பித்துள்ளன. இதே நிலை நீடித்தால் விவசாயம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். இப்பவே குளிர் தாங்க முடியவில்லை. இன்னும் மைனஸ் டிகிரி போச்சுன்னா ரொம்ப கஷ்டம் ஆயிடும். ஜனவரி பாதி வரைக்கும் குளிர் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top