Misc

நீ என்ன அவ்ளோ பெரிய பிஸ்தாவா என்று கேட்பதற்கு முன் சற்று யோசியுங்கள் உண்மையிலேயே பெரிய ஆளு தான் என்று இப்போ தான தெரியுது

Apr 29 2021 08:18:00 AM

பிஸ்தா உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்றாலும் அதிலும் சில ஆபத்துகள் அடங்கியிருக்கிறது. பிஸ்தாவை மிட்டாய் என்று நினைத்துக்கொண்டு இஷ்டம்போல சாப்பிட்டால் ஏகப்பட்ட பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற தகவல் நமக்கு முற்றிலும் புதிதாகத்தான் தெரியும். ஆனால் இது குறித்து எப்போதோ நம் முன்னோர் கூறியுள்ளனர்.

pistha-benefits

எடை குறைக்க உதவும் பிஸ்தாவை அதிகமாக சாப்பிட்டால் அதுவே உங்கள் எடை அதிகரிக்க காரணமாக அமையும். சிறுநீரக பிரச்சனைகள் இருப்பவர்கள் பிஸ்தாவை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பிஸ்தா சாப்பிடுவதால் உங்களுக்கு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்பதை நீங்கள் நன்றாக உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு சிலருக்கு இதனால் மலச்சிக்கல், வயிற்று வலி, சிறுநீரக கோளாறு போன்றவை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது .

pistha-benefits

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவில் இதை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவர்கள் ஒன்று அல்லது 2 கைப்பிடி அளவு வரை சாப்பிடலாம். அதற்குமேல் சாப்பிட்டால் தலைவலி, கால் பிடிப்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். எனவே பிஸ்தாவை சாப்பிடும் முன் யோசித்து அளவாக சாப்பிடுங்கள். கிடைத்ததே போதுமென்று வெளுத்துக்கட்ட வேண்டாம்.