#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான்!!! மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை???
  • 19:55PM Sep 21,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:55PM Sep 21,2019 Chennai

சர்வதேச சந்தையில் CRUDE OIL விலை, அன்னியச் செலவாணி, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு PETROL, DIESEL விலையை எண்ணெய் நிறுவனக் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை, PETROL, DIESEL விலை குறைந்து வந்தது. ஒரு நிலையான விலையில் அது நீடித்திருந்தது. ஆனால், கடந்த ஐந்து நாட்களில் மட்டும், PETROL, DIESEL விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் 3 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன் சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயலில், கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஆலை மற்றும் வயல் தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக CRUDE OIL SUPPLY-யை சவூதி அரேபிய அரசு குறைத்துக் கொண்டுள்ளது. இதனால், உலக நாடுகளில் PETROL, DIESEL விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் எதிரொலியாகக் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து PETROL, DIESEL விலை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 15-ம் தேதியில், PETROL ஒரு LITRE ரூ.74.50 முதல் ரூ.76 வரையிலும், DIESEL விலை ரூ.69 முதல் ரூ.70.50 வரையிலும் இருந்தது.

இது, 17-ம் தேதியில் முறையே PETROL 14 பைசா, DIESEL 16 பைசா, 18-ம் தேதியில் 27, 26 பைசா, 19-ம் தேதி 30, 20 பைசா என அதிகரிக்கப்பட்டது. நேற்று 20-ம் தேதி, PETROL 37 பைசாவும், DIESEL 30 பைசாவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 5 நாளில் PETROL ரூ.1.15, DIESEL 99 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இன்று காலை PETROL ரூ.76.35-க்கும், DIESEL ரூ.70.50க்கும் விற்கப்பட்டது. இது சென்னை, கோவை, திருச்சி, வேலூர், நெல்லை என நகரங்களுக்கிடையே மாறுபட்டு இருந்தது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் மேலும் ரூ.3 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்ன செய்ய???

E-Bike Facts  |  Mobile Use in Bunks  |  Petrol Price Hike  |  Excise Duty Burden   |  Petrol Bomb Hurl  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top