Rainforest

பல நூற்றாண்டுகளை கடந்தும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு! சாதாரண கோட்டுக்கு பின்னாடி இவ்வளவு மர்மங்கள் ஒளிந்திருக்க என்ன காரணம்?

May 19 2021 08:41:00 PM

பெருவில் அமைந்துள்ள லிமா என்ற பகுதியில் இருந்து 250 மைல்களுக்கு அப்பால் மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதி ஒன்று இருக்கிறது. இந்த இடத்தில் சில மர்மமான விஷயங்கள் உள்ளது. இங்கு 170 சதுர மைல் பரப்பளவில் சில வித்தியாசமான உருவங்கள் காணப்படுகிறது. இந்த உருவங்களை அருகில் இருந்து பார்க்கும் போதும் சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போதும் வித்தியாசமாக நம் கண்களுக்கு தெரிகின்றது.

peru-lima-mystry

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழ்ந்த நாஸ்கா என்னும் இனத்தை சேர்ந்தவர்களால் கோடுகளை போன்ற இந்த உருவங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இவை நாஸ்கா கோடுகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோடுகள் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 30 மைல் தூரம் வரை இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளது.

peru-lima-mystry

15ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இந்த கோடுகளை பார்த்த சிலர் சாலை ஏதோ மேடு பள்ளமாக இருக்கிறது என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 1927ம் ஆண்டு வரை இந்த கோடுகளை பற்றி யாருக்குமே தெரியவில்லை. பெருவை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டோரியியோ மெஜியா ஜெஸ்பே ஒருநாள் மலை உச்சியில் இருந்து இந்த வறண்ட நிலப்பகுதியை பார்த்த போது நாஸ்கா கோடுகளில் இருக்கும் வித்தியாசமான உருவங்கள் அவர் கண்ணில் பட்டது.

peru-lima-mystry

இது மேடுபள்ளம் நிறைந்த சாலைப்பகுதி அல்ல திட்டமிட்டு பழங்காலத்தில் வரையப்பட்ட கோடுகள் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதன் பிறகே பல ஆராய்ச்சியாளர்களும் இந்த கோடுகளை பற்றி ஆராய்ச்சி செய்ய தொடங்கினர். இந்த கோடுகளில் இயற்கையை சித்தரிக்கும் விதத்தில் மனிதர்கள், பறவைகள், பூச்சிகள், மரங்கள் போன்ற உருவங்கள் தான் காணப்படுகிறது. ஆச்சர்யமளிக்கும் விதமாக ஒரு உருவம் பார்ப்பதற்கு விண்வெளி வீரரை போன்று உள்ளது.

peru-lima-mystry

விமானத்தின் ஜன்னல் வழியாக பார்த்தால் மிகத்தெளிவாக இந்த கோடுகளை பார்க்க முடியும். மிகவும் வறண்ட பிரதேசமாக இருக்கும் இந்த இடத்தில் வருடத்திற்கு வெறும் 4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்கிறது. இதன் காரணமாகவே இந்த கோடுகளை பற்றி பல நூற்றாண்டுகளாக எந்த தகவலும் தெரிந்து கொள்ள முடியாமல் போனது. இந்த கோடுகள் எப்படி வரையப்பட்டிருக்கும்? ஏன் வரையப்பட்டது? இந்த கேள்விகளுக்கு இன்னமும் நமக்கு தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை.