#ENCOUNTER: HYDERABAD DOCTOR விஷயத்தில் ENCOUNTER-ஐ வரவேற்கும் மக்கள்!!! இந்த மனநிலை சரிதானா???
  • 15:37PM Jan 16,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:37PM Jan 16,2020 Chennai

ஒரு வாரமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த விஷயம், HYDERABAD-ஐச் சேர்ந்த பெண் DOCTOR PRIYANKA REDDY-யின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குதான். இத்தனை விரைவாக ஒரு வழக்கு முடியுமா என்று கேள்வி எழும் வேகத்தில், ஒரே வாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்து, நேற்று ENCOUNTER-ம் செய்தாகிவிட்டது. ஆனால், விஷயம் மேலே நடந்தவற்றைப் பற்றி அல்ல. இதை வரவேற்று இரண்டு நாட்களாக மக்கள் அனைவரும் பேசி வருவதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். ENCOUNTER செய்த போலீஸ்காரர்களைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆடிய மக்களில் ஆரம்பித்து, SOCIAL MEDIA-வில் வாழ்த்துப் பாடுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்த மனநிலை பிரதிபலிப்பது என்ன??? இது தொடர்ந்தால் என்ன நடக்கும்??? இதைப் பார்க்கலாமா???

COWBOY ATTITUDE எனப்படும் இந்த தப்பு செய்தால், உடனே கொல்ல வேண்டும் என்ற MENTALITY – நிஜத்தில் வெறும் CLICHÉ-தான். அதாவது சினிமாத்தனம் என்று கூடச் சொல்லலாம். ஆனால், மக்களின் மனதில், நீதிமன்றங்களின் மேலும், சட்டத்தின் மேலும் உள்ள நம்பிக்கைக் குறைவைத்தான் அதிகம் வெளிப்படுத்துகின்றது. நீதிமன்றங்களுக்குப் போனால் நீதி கிடைக்காது, அதனால் இப்படி ENCOUNTER மூலம் நீதி நிலைநாட்டப்பட்டது என்பது ஒரு மாற்று மனநிலை. எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம். இந்த ஆதங்கம்தான் பெரிய அரசுகளைக் கவிழ்த்த பெரும் புரட்சிகளாகப் பின்னாளில் வெடித்திருக்கிறது. ஆயுதம் எடுக்காமல் நீதி கிடைக்காது என்ற அடிப்படைத் தீவிரவாதச் சித்தாந்தமாக மாறும். சரி, இது கூட நியாயமாகத் தீர்ப்புகள் வரும் போது மாறிவிடும். இல்லாவிட்டால், தவறிழைத்த அரசுகள் அனுபவிக்க வேண்டிய நீதி என்று விட்டாலும் கூட அடுத்த விஷயம்தான் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அது காவல்துறையினருக்கு ENCOUNTER செய்ய நாம் கொடுக்கும் அங்கீகாரம். நல்ல காவல்துறையினர் எல்லாப் பக்கமும் இருக்கிறார்கள். அதையும் தாண்டிப் பெரும்பாலான குற்றவாளிகளை வளர்த்து விடுவதும் அதே காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள். இன்று ENCOUNTER செய்தால் தவறில்லை என்று நாம் பதிய வைப்பது, நாளை அது நம்மை நோக்கியும் திரும்பக் கூடும் என்ற தெளிவின்மைதான். நல்ல காவலர் கையில் இருக்கும் துப்பாக்கி, கெட்டவர்களை ENCOUNTER செய்யும் என்றால், மோசமானவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கி மக்களுக்குத்தான் பாதிப்பாக அமையும். இதில் நல்லவர்கள் எத்தனை சதவீதம், கெட்டவர்கள் எத்தனை சதவீதம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சொல்லப் போனால் இரண்டும் நல்லதல்ல. ஆனால், நீதி வேண்டுமென்றால் வேறென்ன செய்வது என்று கேட்டால், பதிலில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்ன செய்ய???

CRPF Valor Day  |  Traffic Police  |  Disaster Management  |  Mobile Theft  |  Woman Police Officers  | 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top