TAMILNADU GOVERNMENT: இப்படியெல்லாம் யோசிக்க யார் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னே தெரியலையே!!! PACKED FOOD PRODUCTS-ஓட PLASTIC கவரையெல்லாம் அவங்களுக்கே திருப்பி அனுப்பனுமாம்!!!
  • 20:36PM Jan 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:36PM Jan 04,2019 Chennai

அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட PLASTIC கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப திட்டம் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத PLASTIC பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர PLASTIC-ஆல் ஆன தாள்கள், தட்டுகள், TEA CUP-கள், WATER பாக்கெட்டுகள், கைப்பைகள் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தடைவிதித்தது. இந்த தடை உத்தரவு தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், PLASTIC பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மற்றும் தனிப்படை அதிகாரிகள் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட PLASTIC பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பெரு நிறுவனங்களில் BISCUIT, NOODLES, நொறுக்குத்தீனி கவர்களுக்கு தடை இல்லை எனவும், சிறு குறு நிறுவன தயாரிப்புகளின் PLASTIC தயாரிப்புகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ளது. அதாவது, அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட PLASTIC COVER-களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப திட்டம் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பெரு நிறுவன பொருட்களின் COVER-களைச் சேகரிக்க மாவட்டந்தோறும், மையங்கள் அமைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி எப்படி??? நாம் பருப்பிலிருந்து, SNACKS வரைக்கும் காசு கொடுத்துப் பொருளாக வாங்குவோமாம். பிறகு அந்த COVER-ஐ மொத்தமாக சேமித்து இவர்கள் மாவட்டம்தோறும் அமைக்கும் மையங்களுக்குக் கொண்டு சேர்ப்போமாம், அதை இவர்கள் அப்படியே அந்தந்த நிறுவனங்களுக்குத் திருப்பி அனுப்புவார்களாம். அவர்கள் அந்தக் கவரை மறு சுழற்சி செய்து மறுபடியும் புதிய PACKING-ஆக மாற்றி நமக்குப் பொருளுடன் திருப்பி அனுப்புவார்களாம். PALSTIC தடை என்பது முழுமையன PLASTIC தடை என்றிருந்தால் பரவாயில்லை. CORPORATE நிறுவனங்களால் சுலபமாக தங்கள் PACKING-களை மாற்றி வேறு PACKING-கிற்கு செல்ல முடியும். என்ன இரண்டு ரூபாய் சேர்த்துக் கேட்பார்கள். ஆனால், இவர்களால் அதை அவர்களிடம் சொல்ல முடியாது என்பதால், நாம் இங்கு வெட்டி வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமாம். மற்றவற்றை விடுங்கள், குறைந்தபட்சம் குளிர்பானத் தொழிற்சாலைகளையாவது முழுக்க பாட்டிலுக்கு மாற்றலாமே…

ரோட்டோரம் மாவு அரைத்து விற்பனை செய்பவர்கள், காய்கறிகளை வாங்கி வந்து ஒரு பாக்கெட் பத்து ரூபாய் என்று விற்பனை செய்பவர்கள் இப்படி சிறிய அளவிலான PLASTIC COVER-களின் உபயோகத்தை நம்பி வாழும் பல தொழில்கள் பாதிக்கப்படும் போது, பெரிய நிறுவனங்கள் மட்டும் நோகாமல் எதற்கு இருக்க வேண்டும். காலையில் வேலைக்கு செல்லும் ஆண், கையில் சம்புடத்தை எடுத்துக் கொண்டு வேலைக்குப் போய்த் திரும்ப வரும் போது அந்த சம்புடத்தில் மாவு வாங்கி வர வேண்டும். அதானே??? ஆனால், பெரிய மனிதர்கள் அவர்கள் PACKING-கைக் கூட மாற்றாமல் இருக்கலாம், அவர்களுக்கு அரசே அதற்கான மாற்றுத் திட்டத்தையும் கொடுக்கும் என்றால் யாருக்கான அரசு இது??? எல்லாவற்றையும் விட இப்படியெல்லாம் எப்படித் தாங்களாகவே யோசிக்கிறார்களா அல்லது யாராவது யோசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்களா என்பதுதான் இப்போது குழப்பமாக இருக்கிறது. சொன்னால் கேட்கவா போகிறார்கள்??? என்னவோ செய்துவிட்டுப் போகட்டும்!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top