#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை!!! PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில!!!
  • 17:46PM Jul 10,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:46PM Jul 10,2019 Chennai

BRITISH HIGHWAY ஓரமா இரண்டு நாளைக்கு முன்னால், சாலையில் போகிறவர்கள் பறக்க முடியாத ஒரு பளீர் மஞ்சள் கலர் பறவை ஒண்ணைப் பார்த்திருக்காங்க. உடனே, ஏதோ ஒரு அரிய வகை பறவையினத்தைக் கண்டுபிடிச்சுட்டோம்னு அவசர அவசரமா ANIMAL RESCUE-வுக்கு PHONE பண்ணிக் கூப்பிட்டிருக்காங்க. அவங்களும், அது PHOENIX இனத்துல ஏதாவது பறவையினமா இருக்குமோ என்னவோன்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்போட வந்து பார்த்திருக்காங்க. பார்த்த உடனே, இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒரு சந்தேகத்தோடவே அதைத் தூக்கிட்டுப் போயிருக்காங்க.

அங்க ஒருத்தர் இதைப் பார்த்ததும், இது SEA GULL-தானேன்னு கேட்டிருக்கார். ஆனால், SEAGULL எல்லாம் வெள்ளையாத்தான் இருக்கும், இது எப்படி இந்தக் கலர்ல இருக்குன்னு யோசிச்சிட்டிருந்தப்போத்தான் ஒருத்தர் அது மேல ஒரு மாதிரி பழக்கப்பட்ட வாசனை அடிக்கிறதை SMELL பண்ணியிருக்கார். கடைசியில் பார்த்தா, நம்ம “மூன்றாம் பிறை” படத்துல கமலஹாசன் ஒரு நரி சாயத்தொட்டியில் விழுந்த கதையைச் சொல்வார் இல்லை. அது மாதிரி இது எங்கேயோ மசாலா புரட்டி வச்சிருந்த இடத்துல போய் மசாலாவில முங்கி எழுந்திருச்சிருக்கு.

அங்க ESCAPE ஆனாலும், இறக்கையில் மசாலா ஒட்டியிருந்ததால, அதனால பறக்க முடியாம தத்தித் தத்தி, சரி, பஸ் பிடிச்சாவது போவோம்னு HIGHWAY பக்கம் வந்திருக்கு போல, நம்மாளுங்க பிடிச்சுக் கொடுத்துட்டாங்க. அப்புறம் என்ன, நல்லா தண்ணியில போட்டுப் புரட்டி மசாலாவைப் பூரா கழுவி காய வச்சுப் பறக்க விட்டிருக்காங்க. இனிமே வீட்டுக்குள்ள திருடப் போவே??? இது மாதிரி ஏற்கெனவே ஒருவாட்டி இவங்க இடத்திலயே நடந்திருக்காம். ஒரு பார்ட்டி அப்போ CHICKEN வறுக்கிறதுக்கு மசாலா போட்டுப் புரட்டி வச்சிருக்காங்க. CHICKEN-க்கு ஆசைப்பட்டு வந்து, ஒரு பறவை இதே மாதிரி CHICKEN-ஓட CHICKEN-ஆ மசாலாவில் மாட்டிகிட்டு உட்கார்ந்திருக்கு. நல்லவேளை கவனிச்சுக் காப்பாத்தினாங்க. பறவைகளுக்கு மசாலா ஒத்துக்காதுன்னு சொன்னா கேக்குதுங்களா???

Karen Cat Bird  |  World Sparrow Day  |  Most Beautiful Birds  |  XMen-Dark-Phoenix Trailer  |  Black is Real Beauty  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top