#Pavi Teacher : பவி டீச்சரை இனிமே சினிமாவில் பார்க்கலாம் !!!
  • 00:17AM Oct 30,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:17AM Oct 30,2019 Chennai

சில நாட்களாகவே தமிழ் நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் பாவி டீச்சர் தான், இவரின் இயற் பெயர் பிரிகிதா, இவர் சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார், இவரின் நடிப்பில் யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். இந்த வெப் சீரிஸ் தொலைக்காட்சி மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது.

pavithra4.jpg

இந்த வெப் சீரிஸில்   காதலில் தோல்வி அடைந்த இளைஞன் பிரசாத்தின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து கதை செல்கிறது , இந்த தொடர். ஒவ்வொரு எபிசோடும் பல லட்சம் பேர்  பார்த்து வருகிறார்கள், அதற்கு முக்கிய காரணமே பவித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரிகிதா என்றால் மிகையில்லை.

pavithra3.png

இந்நிலையில் இளைய தளபதி விஜய் பிகில் படத்தைத் தொடர்ந்து தற்பொழுது  உருவாகி வரும் படம் தளபதி 64.  இந்தப் படத்தை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை பிரிகிதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என தெரிகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top