Lushgreen

பவானியால் காயினை பயன்படுத்த முடியாது என்று கமல்ஹாசன் கூற காரணம் என்ன? முன்னரே தீர்மானிக்கப்பட்டது இப்போது தான் வெளியிடப்பட்டுள்ளதா?

Oct 25 2021 11:04:00 AM

பிக் பாஸ் 5-வது சீசனில் நேற்று அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக பவானி தன்னிடம் இருந்த பஞ்ச தந்திர காயின் மூலமாக அபிஷேக் ராஜாவை காப்பாற்ற முன்வந்தபோது கமல்ஹாசன் பவானியால் காயினை பயன்படுத்த முடியாது என்று கூறி தடுத்துவிட்டார். இது எதற்காக நடைபெற்றது என்று சரியாக விளக்கம் கொடுக்கப்படவில்லை.

abishek-elimination pavani-coin

பிக் பாசில் நேற்று முன்தினம் ஒவ்வொருவர் மீதான புகார்களையும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். குறிப்பாக தாமரை மற்றும் இசைவாணி இருவரையும் கெஞ்சவேண்டாம் என்று கூறினார். பவானி மற்றும் அக்சரா இருவரையும் சண்டையிட வேண்டாம் என்று கூறினார். ராஜுவின் செயல்கள் நல்லவிதமாக இருப்பதாக பாராட்டினார். பிரியங்காவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றார். இறுதியாக சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் நாமினேஷனில் இருந்தனர். கடைசியாக மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி அபிஷேக் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

abishek-elimination pavani-coin

அப்போது பவானி தன்னிடம் இருந்த காயின் மூலமாக அபிஷேக்கை காப்பாற்ற முன்வந்தார். இருப்பினும் அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த டாஸ்க் கொடுக்கும்போது வந்த அறிவிப்பு என்னவென்றால், காயின் வைத்திருப்பவர் தன்னையோ அல்லது தனக்கு வேண்டியவரையோ இந்த காயினை வைத்து நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம் என்பது தான். ஆனால் தற்போது அபிஷேக் ராஜா எலிமினேட் ஆகியுள்ளார். அவரை முன்கூட்டியே நாமினேஷன் ஆகாமல் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் கடைசியில் அந்த காயின் பயன்படுத்த முடியாது என்று கமல்ஹாசன் கூறி விட்டார். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் அது பலனளிக்காதே!

abishek-elimination pavani-coin

ஒரு வேளை அபிஷேக் ராஜா மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவரை வெளியேற்றியதா? அல்லது அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் விதிமீறலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்றினார்களா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எது எப்படியோ, மக்கள் தீர்ப்பு எப்போதும் சரியாகத்தானே இருக்கும்இன்று முதல் இந்த இம்சை அரசன் தொல்லை இல்லாமல் பிக் பாஸ் வீடு நிம்மதியாக இருக்கும். அபிஷேக் ராஜாவிற்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ?