தேசபக்தியெனப்படுவது யாதெனில்!!!
 • 11:01AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 11:01AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்றைய இளைஞர்களின் மத்தியில், தேசபக்தி மிகவும் குறைந்துவிட்டதாக கூறப்படும் வேளையில் அவற்றைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமை. அதற்காகக் கீழே சில குறிப்புகள் உங்கள் பார்வைக்காக…

 1. நாட்டின் இறையாண்மையை பாதுகாத்திட வேண்டும்.
 2. நாட்டின் அனைத்து மதத்தினருக்கும் சம ஈவு, சம நுகர்வு, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
 3. நாட்டில் அனைவருக்கும் சமமான நீதி அளித்திடல் வேண்டும்.
 4. நமக்கு உள்ள வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து நடந்திட வேண்டும்.
 5. பொருளை ஈட்டவும், பாதுகாக்கவும், செலவு செய்யவும் அவரவருக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாத்தல் வேண்டும்.
 6. கல்வி போன்ற விஷயங்களில் ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது.
 7. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எவற்றையும் செய்யக் கூடாது.
 8. வன்முறையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டக் கூடாது.
 9. சட்டங்களில் தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ள எதனையும் செய்யக் கூடாது. அடித்தல், கொலை, கொள்ளையடித்தல், திருடுதல், அதிகாரத்தைக் காட்டி மிரட்டுதல், லஞ்சம் வாங்குதல் என எதையும் செய்யக் கூடாது.
 10. நமது நலன் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் பிறகு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 11. பிறருடைய கலாச்சாரத்தையோ, பழக்கத்தையோ அவமதிக்க, அல்லது நமது கலாச்சாரத்தை திணிக்கவோ முயலக் கூடாது.
 12. அவரவர்கள் பண்பாடும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கவும், பின் பற்றவுமான அதிகாரம் ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளது.
 13. நமது தேவைக்காக மக்களின் பணத்தை வீணடிக்கக் கூடாது. 
 14. ஒவ்வொரு இந்தியனுக்கும் தனது கருத்துகளை வெளியிடவும், அதற்காகப் போராடவும் உரிமை உள்ளது. அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
 15. தேசியக் கொடியை துண்டாகவோ, யோகா மேட் ஆகவோ அல்லது வேறு எந்தப் பொருளாகவே தரையில் போடக் கூடாது.  கொடி மண்ணில் படாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடைமை.
 16. ஏற்றத் தாழ்வுகள் பொருளாதார ரீதியாகவோ அல்லது சாதீய அடிப்படையில் பார்க்கக் கூடாது.
 17. நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் பயிற்சியளிக்கவோ, செயல்படவோ கூடாது.
 18. மக்கள்தான் உண்மையான அரசாங்கம். பிரதமர் அவர்களின் முதல் வேலைக்காரன் என்பதை மறவாமல் இருக்க வேண்டும்.
 19. எண்ணம், பேச்சு மற்றும் செயல்பாட்டில் சுதந்திரம் இருப்பது மிக அவசியம்.
 20. உண்மைத் தண்மையற்ற செய்திகள் உருவாக்குவதையோ, பரப்புவதையோ தடுத்திட வேண்டும்.
 21. பெண்களுக்கு எதிராக உடலியல் அல்லது மன ரீதியான துண்டல்களையோ வசவுகளையோ ஒரு போதும் செய்யக் கூடாது.
 22. தாய்மொழியைப் போலவே அனைத்து மோழிகளையும் மதிக்க வேண்டும். 

 

இவையனைத்தும் பின்பற்ற வேண்டியது ஒரு உண்மையான தேசபக்தனின் கடமை.  இதைப் படித்தபின் யாருக்காவது வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top