Misc

அந்த ஒரு மனசு தான் சார் கடவுள்! என்ன ஒரு உயர்ந்த உள்ளம் படைத்த மனிதர் இவரைப்போல எல்லோரும் உதவிக்கரம் நீட்டலாமே

Apr 28 2021 08:14:00 AM

கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தவித்து வருகிறது இந்தியா. நாள்தோறும் பல லட்சம் பேர் தொற்றால் பாதிப்பது வேதனை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. மேலும் ஆக்ஸிஜன் பற்றைக்குறையால் பல நோயாளிகள் இறந்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் பல்வேறு நாடுகளைசேர்ந்த பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவுக்கு செய்து வருகின்றனர்.

pat-cummins-donation

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான பேட் கம்மின்ஸ் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு 50000 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 37 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது இந்த செயல் பாராட்டக்கூடியதாகும். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் கம்மின்ஸ் இதுபற்றி கூறுகையில் அன்பாக பழக்கூடிய இந்திய மக்களின் மீது ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிப்பது எனக்கு கடும் துயரத்தை தந்து விட்டது.

pat-cummins-donation

இந்த சூழலில் என்னால் முடிந்த சிறிய உதவியை இந்திய மக்களுக்கு செய்ய நினைத்தேன். இது வெறும் ஆரம்பமே. என்னைப்போல் பலரும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். நான் கொடுத்திருக்கும் நிதி ஆக்சிஜன் பற்றைக்குறையை போக்க உதவும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இந்த இக்கட்டான சூழலில் வீட்டில் இருக்கும் மக்களை விளையாட்டு மூலம் மகிழ்விக்கவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவருடைய இந்த செயலை பல தரப்பினரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.