#Job : அமேசானின் பார்ட் டைம் ஜாப் ஒருமணி நேரத்திற்கு ரூ 140!!!
  • 19:19PM Jun 24,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 19:19PM Jun 24,2019 Tamil Nadu

உலகப்புகழ் பெற்ற அமேசான் பொருள்களை விற்பனை செய்யும் ஆன்லைன் ஸ்டோர் மட்டுமில்லை தனது Kindle  மூலமாக எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை விற்பனை செய்கிறது,Merch மூலமாக டிசைனர்கள் மூலமாக டிசைன் செய்யப்பட்ட டி ஷர்ட் விற்பனை செய்கிறது,இப்படி பல தொழில்களைஅமேசான் நிறுவனம் செய்து வருகிறது

amazon flex.jpg

இதன் தொடர்ச்சியாக அமேசான் நிறுவனம் தனது அமேசான் ஃப்ளக்ஸ் ஆப் மூலமாக இந்தியாவில் பகுதி நேர வேலைவாய்ப்பை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த நேரத்தில் மணிக்கு 140 ரூபாய் ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் பின் வருமாறு

amazon flex1.jpg

அமேசான் ஃப்ளக்ஸ் ஆப்  மூலம் அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடலாம். அமேசான் ஃப்ளக்ஸ் ஆப் மூலம் தங்களைப் பகுதி நேர டெலிவரி பணியாளராகப் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்க்கு ஒரு பைக்  அவசியம். பகுதி நேரமாகப் பணியாற்ற விரும்புபவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பணி நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம்.

amazon flex2.jpg

இரு சக்கர வாகனம் மட்டுமில்லாமல்  ஆட்டோ  அல்லது கார்   பயன்படுத்த விரும்பினாலும் அந்த ஆப் மூலம் தெரியப்படுத்தலாம் . முதற்கட்டமாக இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகராங்களில் மட்டுமே அமேசான் ஃப்ளக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதர முக்கிய நகரங்களிலும் இந்த வாய்ப்பு விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top