#parenting: குழந்தை வளர்ப்பில் பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு? இனியாவது மாற்றிக்கொள்வோம்!
  • 14:05PM May 03,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:05PM May 03,2019 Chennai

பெரியவர்கள் இல்லாத வீட்டில் , பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என தெரியாமல் கண்டிப்பாக திணறுவார்கள். குழந்தைகளை குளிக்க வைப்பது முதல் அதற்கு அறிவுரை சொல்வது வரை பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கும் பாட்டி தாத்தா ஆதரவரோடு வளரும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.அப்படி பெற்றோர்கள் குழந்தைகளை பெரியவர்களின் ஆதரவின்றி வளர்க்கும் போது ஏற்படும் தவறுதல்களை இந்த பதிவில் காணலாம்.

#1. பொதுவாகவே எல்லா பெற்றோர்களும் தன் குழந்தை எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கஷ்டப்பட்டாலும் சரி குழந்தை ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்து விடுவார்கள்..இதனால் குழந்தை நாம் ஆசைப்படுவது எல்லாம் கிடைக்கும் என நினைத்து கொண்டு, ஒரு நாள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் திணறும்.பெரியவர்கள் இருப்பின் செல்லம் கொடுக்காதே என கட்டுப்படுத்தி வைப்பார்கள்..

#2. குழந்தைகள் முன் மற்றவர்கள் பற்றி விமர்சிக்காதீர்கள்.

#3. குழந்தைகளை மிரட்டும் போது கடுமையான வார்த்தைகளை பேசாதீர்கள்.குழந்தைகள் யோசிக்கும் அளவிற்கு ஆழமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்..

#4. குழந்தைகளை ஒரு ஆளாக நினைத்து கொண்டு அதன் முன் யாரை பற்றியும் குடும்ப நிகழ்வுகள் குறித்தும் உறவுகள் பற்றியும் பேசாதீர்கள்

#5. காசு கொடுத்து பழக்க வேண்டாம். ஒரு சிலரது வீடுகளில் கடைக்கு போய் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிவந்தால் குழந்தைகளுக்கு காசு கொடுப்பார்கள்.இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்

#6. ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிறப்பான தனித்திறனுடன் இருக்கும். உங்களது குழந்தையிடம் என்ன சிறப்பு திறன் உள்ளதோ அதை வைத்து உங்களது குழந்தையை பெருமையாக பேசுங்கள்.மற்ற குழந்தைகளின் திறனோடு ஒப்பிடாதீர்கள்..

#parenting: பெரியவர்கள் இருக்கும் வீட்டில் மேற்க்கண்ட ஒரு சில தவறுகள் தவிர்க்கப்படும்..இப்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகும் சூழலே நிலவுகிறது.அப்படி இருக்கும் போது குழந்தைகளிடம் செலவழிக்கும் நேரமும் குறையும்.அவர்களை பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் குறையும்..தாத்தா,பாட்டி இருக்கும் வீட்டில் எந்நேரமும் அவர்கள் குழந்தைகளை கவனித்து கொண்டே இருப்பார்கள்,இதனாலே குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுகள் குறையும்.குழந்தைகளும் நல்ல அறிவுரைகளை கேட்டு வளரும்

Top