Misc

இப்படிகூடவா பெயர் வைப்பார்கள் ? பெயர் எப்படி இருந்தாலும் இந்த பயலின் கெட்டிக்காரத்தனம் யாருக்கும் வராது

Apr 08 2021 08:35:00 PM

நமக்கு தெரியாத எத்தனையோ கீரை வகைகள் இருக்கின்றன. அதிலொன்று தான் பரட்டை கீரை. பெயரை கேட்டால் வித்தியாசமாக தோன்றும். ஆனால் பெயரை விட வித்தியாசமான மருத்துவ குணங்களை இந்த கீரை பெற்றுள்ளது.

parattai-keerai

உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக இதை பயன்படுத்தலாம். பரட்டை கீரையை அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் போடி சேர்த்து தைலம் போல செய்து காயம் பட்ட இடத்தில தடவினால் விரைவாக குணமாகி விடும். பாதங்களில் முள், கண்ணடித்துண்டு ஏதாவது குத்தினால் தீராத வலியை ஏற்படுத்தும். குத்திய இடத்தில இந்த கீரையை அரைத்து பொடி செய்து கட்டினால் வலி நீங்குவதோடு குத்திய நுண்ணிய துண்டுகளை எளிதாக வெளியேற்றிவிடும்.

parattai-keerai

இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் காப்பதற்கு இந்த கீரையை உண்ணலாம். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூட குறைக்க முடியும். உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த கீரையை உட்கொள்வதினால் நல்ல பலன்களை காண முடியும். சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான சக்திகளை இந்த கீரை வழங்குகிறது. வயிற்றுப்புண் மற்றும் செரிமான கோளாறுகளை நீக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நம்முடைய எலும்புகளை வலுவாக்குவதுடன் சிறுநீரக கற்கள் வராமலும் பாதுகாக்கிறது.