#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை! ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு!
  • 16:58PM May 24,2019 Cook Islands
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:58PM May 24,2019 Cook Islands

ஆங்கிலேயர் ஒருவரின் குடும்பம் மட்டுமே வாழும் அதிசிய தீவு ஒன்றை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தத் தீவுக்குச் செல்லவேண்டும் என்றால் குறைந்தது 9 நாட்கள் ஆகும்! அதுவும் விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ இந்தத் தீவுக்குச் செல்லமுடியாது, படகில் மட்டுமே செல்லமுடியும்! இதில் மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தத் தீவில் வசிக்கும் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! இவர்கள் மட்டுமே கடந்த நூற்றாண்டாகத் தனியாக இந்தத் தீவில் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தீவில் ஒரு பெட்டிக்கடை கூடக் கிடையாது, இங்குள்ளவர்கள் வெறும் தென்னைமரம் பயிரிடும், மீன் பிடித்தும் தான் வாழ்ந்து வருகின்றனர்! இவ்வளவு வினோதங்களைக் கொண்ட இந்தத் தீவை வில்லியம் மாஸ்டர் என்பவர் உருவாக்கினார்.

நாடுகளைக் கைப்பற்ற ஆங்கிலயேர்கள் கண்டங்கள் கடந்து உலகின் அனைத்து மூலைக்கும் சென்றனர். பசுபிக் பெருங்கடல் பகுதிகளைக் கைப்பற்ற ஏகப்பட்ட ஆங்கிலேயர்கள் பயணித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜேம்ஸ் குக். இவர் 1774-ம் ஆண்டு இந்தத் தீவையும், இதனைச் சுற்றியுள்ள மற்ற தீவுகளையும் கண்டுபிடித்தார். அதன்பின் இந்தத் தீவின் பக்கம் யாரும் வரவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் மட்டுமே அனைவரும் தாங்கினார். நாட்கள் கடந்தோட 1863-ம் ஆண்டு வில்லியம் மாஸ்டர் என்பவர் தனது மூன்று மனைவிகளுடன் இந்தத் தீவுக்கு வந்தார். இவர் இந்தத் தீவுக்கு வரும்போது ஒருவர் கூட இங்கு வாழவில்லை.

யாருமே வாழாத இந்தத் தீவில் தனது வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்று வில்லியம் மாஸ்டர் எண்ணினார் போல, இந்தத் தீவிலேயே தனது மூன்று மனைவிகளுடன் சந்தோசமாக வாழத்தொடங்கினர். இவருக்கும் இவரது மூன்று மனைவிக்கும் 23 குழந்தைகள் பிறந்தன. இவர்கள் அனைவரும் இந்தத் தீவிலேயே வாழத்தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், இங்குக் கிடைக்கும் இளநீர், பழங்கள் ஆகியவற்றை விற்கவும் வில்லியம் மாஸ்டர் 9 நாட்கள் பயணித்து மற்ற தீவுகளுக்குச் சென்று விற்றுவருவர். இவருக்கு வயதான பிறகு இவரது மகன்களும், மகள்களும் மற்ற தீவுகளுக்குச் சென்று விற்றுவந்தனர். இப்படியே கடந்த நூற்றாண்டு முழுவதும் இந்தக் குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். வில்லியம் மாஸ்டர் 1899-ல் இறக்கும் போது அவருக்கு மொத்தம் 23 குழந்தைகள், 134 பேரக்குழந்தைகள் இருந்துள்ளனர்.

தற்போது வரையில் வில்லியம் மாஸ்டரின் பரம்பரையில் 1000 அதிகமானோர் உருவாகியுள்ளனர். இதில் பலர் வாழ்வாதாரத்துக்காக இந்தத் தீவை விட்டு மற்ற தீவுக்கும், நியூஸிலாந்திற்கும் சென்றுவிட்டனர். தற்போது இந்த வம்சத்தைச் சேர்ந்த 62 பேர் மட்டுமே இங்கு வசிக்கிறார்கள். இந்தக் குடும்பத்தினர் படிப்பதற்காகப் பள்ளி, தேவனைப் பிராத்திக்கச் சர்ச் ஆகிய அனைத்தும் இங்கு உள்ளது. அதேபோல இங்குக் கடைகள் எதுவும் கிடையாது, ஒரே குடும்பம் என்பதால் தங்களுக்கு வேண்டியதை பொய் வாங்கிவந்து அனைவரும் பகிர்ந்துகொள்வார்கள். இங்கு இன்டர்நெட் வசதியுள்ளது, ஆனால் ஒருநாளுக்கு 3 மணிநேரம் மட்டுமே கிடைக்கும், சிலர் மொபைல் வைத்துள்ளனர். டிவியும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ஓடும். மற்றபடி நகை செய்வது, சொந்தங்களுடன் விளையாடுவது என்று இங்குள்ளவர்கள் நாட்களைக் கழிக்கின்றனர்.

இந்தத் தீவில் மற்றொரு பிரச்னையும் உள்ளது. இந்தத் தீவை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதால் இவர்கள் பரம்பரையின் இரண்டாவது தலைமுறையினர், சொந்தங்களுக்குளே திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவர்களின் உறவு முறை மாறுபட்டது. இதில் அண்ணன் தங்கையைத் திருமணம் செய்துகொண்ட நிலையெல்லாம் இருந்துள்ளது. இந்தத் தீவின் தற்போதைய மேயர் தனது சித்தப்பாவின் மகளை உறவுமுறை தெரியாமல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தபின்பே இந்த உண்மை தெரிந்துள்ளது. இந்தப் பயத்திலேயே இங்குள்ள இளைஞர்கள் மற்ற தீவுகளுக்கு ஓடிவிடுகின்றனர். இவர்கள் எங்குச் சென்றாலும் இந்தத் தீவை தான் தங்களது சொந்துவிடாகத் தெரிவிக்கின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top