Rainforest

எந்தவிதமான கட்டுமானப்பொருட்களும் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு இடத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடமாக மாறிப்போக என்ன காரணம்?

Jul 07 2021 09:55:00 AM

பலாசியோ டி சால் (Palacio de Sal) என்பது உப்புத் தொகுதிகளால் கட்டப்பட்ட ஒரு ஹோட்டல் ஆகும். என்னது உப்பு ஹோட்டலா என்று வாயை பி ளக்காதீர்கள். நிஜமாகவே உப்பை வைத்து தான் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய உப்பு பிளாட் ஆகும். லா பாஸுக்கு தெற்கே 350 கிமீ தொலைவில் உள்ள சலார் டி யுயூனியின் விளிம்பில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

palacio-de-sal

சாலார் டி யுயூனி 10,582 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய உப்பு பிளாட் ஆகும். இது தென்மேற்கு பொலிவியாவில் உள்ள போடோஸ் மற்றும் ஓருரோ துறைகளில் ஆண்டிஸின் முகடுக்கு அருகில் 3,656 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சலார் டி யுயூனி நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இடமாக உள்ளது.

palacio-de-sal

பயணிகள் அதிக தூரம் வந்து தங்கள் நகரங்களுக்குத் திரும்புவதற்கு முன்பு ஓய்வெடுக்க இடம் தேவை. அத்தகைய ஓய்வு இடத்தை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் இப்பகுதியில் அதிகம் கிடைப்பதில்லை. எனவே சாலார் டி யுயூனியில் உப்பால் ஒரு ஹோட்டலை அமைப்பது என்று முடிவு  அதன் படியே செய்து முடித்தனர்.

palacio-de-sal

சலார் டி யுயூனியின் நடுவில் உள்ள உப்புத் தொகுதிகளில் 1993 முதல் 1995 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் முதல் ஹோட்டல் கட்டப்பட்டது. இந்த இடம் விரைவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியது. தவறான நிர்வாகம் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திய இந்த ஹோட்டல் 2002 இல் அகற்றப்பட வேண்டியிருந்தது.

palacio-de-sal

2007 ஆம் ஆண்டில் யுயூனி நகரத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள கிழக்கு விளிம்பில் ஒரு புதிய இடத்தில் பாலாசியோ டி சால் என்ற பெயரில் ஒரு புதிய ஹோட்டல் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சுமார் 1 மில்லியன் உப்புத் தொகுதிகளால் கட்டப்பட்டது. இந்தமுறை அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க சுகாதார அமைப்பு மறுசீரமைக்கப்பட்டது. இந்த ஹோட்டலில் நீராவி அறை, ஒரு உப்பு நீர் குளம் மற்றும் வேர்ல்பூல் குளியல் ஆகியவை உள்ளன.