90 ML ட்ரைலரால் ஓவியாவுக்கு ஏற்பட்டுள்ள அவமானம்!
  • 13:56PM Feb 09,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:56PM Feb 09,2019 Chennai

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்குச் சென்ற ஒரே நடிகை ஓவியா தான்! தனது வெளிப்படையான தைரிய குணத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது பின் நிறுத்தியவர். தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் தனக்கு பெண் பார்த்தால், ஓவியாவை போலக் குணமுடன் இருக்கவேண்டும் என்று சொல்லவைத்தார். ஆனால் தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள 90 ML திரைப்படத்தின் ட்ரைலரால் பெரும் அவதூறுக்கு ஆளாகியுள்ளார். அழகிய அசுரா இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அடல்ட் காமெடி என்பதால் சில ஆபாசக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களின் வெளியிட்டால் கலாச்சாரம் பாதிக்கும் என்று கூறிவந்தவர்கள், தற்போது வெளியாகிய இந்த ட்ரைலரை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதுவும் தற்போதுள்ள பெண்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறும் ஓவியா இப்படி நடித்திருப்பதால் அனைவரின் பேச்சுக்கும் ஓவியா ஆளாகியுள்ளார். படத்தின் ட்ரைலரில் ஓவியா மதுபானம், கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துவது போல காட்சிகள் அமைந்திருப்பதால், இது இளம் பெண்களின் எண்ணத்தைச் சீர்குலைக்கும் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்த ட்ரைலரை பார்த்து, “இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு” என்று ட்வீட் செய்துள்ளார், யூடியூபில் திரைப்பட விமர்சனம் செய்யும் பிரஷாந்த் ரங்கசாமி, "இந்த திரைப்படத்தால் ஓவியா பெயர் கேட்டுவிடக்கூடாது" என்று கூறி ட்வீட் செய்துள்ளார். ஆனால் ஒருபக்கம் இப்படி திரையுலகினர் கருத்து தெரிவிக்க, ஓவியாவின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்தும், அவரது திரைப்படத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளனர். மற்ற படங்களை காட்டிலும், இதில் பெரிதாக ஆபாசம் காட்டவில்லை என்றும் சில ஓவியா பிரியர்கள் கூறிவருகின்றனர்.

Top