Exquisite

#outofthinking: கடைநிலை ஊழியரின் காமன் சென்ஸ், தோற்றுப்போன தொழில்நுட்பம்!

Sep 26 2019

ஆங்கில சொற்றொடரான Out of the box thinking என  சொல்லபடுவதன் அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். ஒரு சோப்பு தயாரிக்கும் ஜப்பான் நிறுவனத்தில் ஒரு பிரச்சினை எழுகிறது. என்னவென்றால் ஒவ்வொரு சோப்பினையும் ஒரு சோப்பு பெட்டிக்குள் வைத்து அதனை விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஆனால்  தவறுதலாக சில பெட்டிகளில் மட்டும் சோப்புகள் வைக்கப்படவில்லை. இந்த செயல்பாடு முழுவதும்  தானியாங்கியால் இயக்கப்பட்டதால் மனித கண்காணிப்புக்கு வாய்ப்பே  இல்லை. 

அந்த சோப்பு பெட்டிகளின் இயக்கம் முழுவதும் கன்வேயர் பெல்ட் மூலம் இயக்கப்பட்டுள்ளது. நிறுவன அதிகாரிகளுக்கு பெரிய குழப்பம் சோப்பு இல்லாத பெட்டியை எப்படி கண்டுபிடிப்பது என..இதற்காக தலைசிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து மீட்டிங்லாம் போட்டு விசாரித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காலி பெட்டிகளை அகற்ற என்ன தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதென தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். 

அந்த நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் அசால்ட்டாக ஐடியா ஒன்றை கூறுகிறார். கான்வெயரின் இறுதிப்பகுதியில் பெரிய மின் விசிரியை வைத்து வேகமாக ஓடவிடுங்க,வெறும் காலி பெட்டிகள்  காற்றின் வேகத்தால் அதுவே கீழே  தள்ளப்படும் ஆங்கில சொற்றொடரான Out of the box thinking என்பது ஒரு பிரச்சனையில் நம்மால் சாதாரணமாக முடிவுக்கு வரவில்லை என்றால் மாற்று சிந்தனை மூலம் தீர்வு காண்பதே.அதற்கு மேற்கண்ட நிகழ்வு சிறப்பான உதாரணமாக அமையும்.