Rainforest

ஆஹா இந்த ஜம்போ சைஸை பார்க்கவே பயங்கரமா இருக்கே! இது மட்டும் நம்ம கிட்ட இருந்தா நாம எங்கேயோ போயிருவோம்

Apr 17 2021 06:09:00 PM

முட்டை பொதுவாக ஒரே செல்லினால் ஆனதாகும். உலகிலேயே மிகப்பெரிய முட்டை எதுவென்றால் அது நெருப்புக்கோழியின் முட்டை தான். இந்த முட்டை சராசரியாக 15 சென்டிமீட்டர் நீளமும் 13 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாகும். இந்த பிரம்மாண்ட முட்டையின் எடை கிட்டத்தட்ட 1.5  கிலோகிராம் வரை இருக்கும்.

ostrich-egg

நாம் உண்ணும் சாதாரண கோழி முட்டையை விட 20 மடங்கு அதிக எடை கொண்டது இந்த நெருப்புக்கோழி முட்டை. கோழி மற்றும் வாத்து முட்டைகளை காட்டிலும் இந்த முட்டை மிகவும் ருசியாக இருக்கும். மெகா சைசில் இருக்கும் இந்த முட்டையை அவிப்பதற்கு சுமார் 1 முதல் 2 மணி நேரம் வரை தேவைப்படும்.

ostrich-egg

இந்த முட்டையின் ஓடுகள் மிகவும் உறுதியாக இருக்கும் என்பதால் இதை அவ்வளவு எளிதாக உடைத்து விட முடியாது. ட்ரில்லிங் இயந்திரம் கொண்டு துளைத்தாலும் சிறிது நேரம் கழித்தே இந்த ஓட்டை உங்களால் பிரித்து எடுக்க முடியும். ஒரு நெருப்புக்கோழி முட்டையை வைத்து தயாரிக்கப்படும் ஆம்லெட்டை கிட்டத்தட்ட 20 பேர் வரை சாப்பிட முடியும் என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.