திருமாலின் அணியமைப்பு...
  • 07:18AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 07:18AM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

திருமலையில் வீட்டிற்கும் திருமாலை காண்பதற்குப் பக்தர்கள் லட்சக்கணக்கில் தினமும் வருகின்றனர்.திருமலை காணும் போது நம்மை அறியாமல் ஒருவிதமான பரவச நிலைக்குச் சென்றுவிடுவோம்.அவரின் கம்பீரமான தோற்றம் மற்றும் அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் பக்தர்களுக்கு ஒரு இனம்பிரியாத உணர்வை ஏற்படுத்தும்.அந்த வகையில் திருமாலுக்கு தினமும் சாத்தப்படும் ஆபரணங்கள்...

  * தங்கப் பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)

 *தங்கத்திலான திருப்பாதங்கள்

 *சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.

 *பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.

 *காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு

 *நாகா வேஸ்பண உதரபந்தம் - மத்தியாபரணம்

 *சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு.

 *சிறிய கழுத்து மாலை

 *பெரிய கழுத்து மாலை - எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.

 *தங்கப் புலி நக மாலை- திருமார்பில் அணியப்படும்.

 *ஐந்து வரிசை கோப்பு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.

 *தங்க யக்னோ பவீதம்- பூ நூல் - ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.

 *சாதாரண பூணூல்.

 *துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.

 *சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)

 *108 அஷ்டோத்தர சத நாம மாலை.

 *சஹஸ்ர நாம மாலை - 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.

 *சூரிய கடாரி - தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.

 *வைகுண்ட ஹஸ்தம்- வலது கை

 *கடி ஹஸ்தம் - இடது கை

 *கடியாலாம்- கங்கணம் (வளையல்)

 *நாகாபரணம்

 *பூஜ கீர்த்திகள்

 *கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)

 *சங்கு சக்ரம் - பின்னிரு கைகளில்

 * கிரீடம் (தலைக்கு)

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top