Highrise

எதுக்கு குழப்பிக்கிட்டுன்னு பெயரையே ஒரிஜினல் என்று வச்சிட்டாங்க போல! என்ன ஒரு அற்புதமான யோசனை!

Sep 13 2021 10:57:00 AM

அமெரிக்காவுல இருந்தாலே எல்லாத்துக்கும் ஒரு தனி திமிரு வந்துருந்துங்க. என்னமோ அவிங்க மட்டுந்தான் பல மில்லியன் டாலர் சம்பாதிக்கிற மாதிரி நினைச்சிக்கிறாங்க. சொந்த ஊருலயே 20 அல்லது 30 ஆயிரம் சம்பளம் வாங்குறவங்கள கேவலமா பாக்குறாங்க. ஏன் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வு மக்கள் மத்தியில் வந்தது என்றே தெரியவில்லை. இத எதுக்கு சொல்லுறேன் என்றால் நானும் இந்த மாதிரி ஒரு ஏளனத்தை சந்தித்துள்ளேன்.

the-original dinerant-america

பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்த ஒருவன் வசதி வாய்ப்பு இருந்ததால் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்கச்சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். அவன் என்னை வெறுப்பேத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே தினமும் அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய உணவகத்துக்கு சென்று விதவிதமாக சாப்பிட்டேன் என்று ஸ்டேட்டஸ் போடுவான். அதைப்பார்த்து நான் பொறாமை பட்டது கிடையாது. அதிலிருக்கும் விஷயங்களை எனக்கு தேவைப்பட்டால் எடுத்துக்கொள்வேன். அப்படி தான் இந்த உணவகத்தை பற்றிய தகவலும் என்னை ஈர்த்தது. அதை உங்களிடமும் சொல்கிறேன்.

the-original dinerant-america

ஒரிஜினல் டைனரண்ட் என்பது அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் அமெரிக்க உணவு வகைகளை பரிமாறும் உணவகமாகும். இந்த உணவகத்தில் உணவுப் போட்டிகள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரிஜினல் டைனரண்ட் பொதுவாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அதன் மெருகூட்டப்பட்ட டோனட் ஸ்லைடர்கள் மற்றும் ஆல்கஹால் மில்க் ஷேக்குகளுக்கு மிகவும் பிரபலமானது.  

the-original dinerant-america

இவர்களுடைய உணவருந்தும் மெனுவில் "டோனட் ஸ்லைடர், கோழி மற்றும் வாஃபிள் சாண்ட்விச், மேரியன் பெர்ரி ஜாம் கொண்ட குரோசண்ட் மான்டே கிறிஸ்டோ, போர்பன் உப்பு கலந்த கேரமல் உட்பட ஆறு வெவ்வேறு மில்க் ஷேக்குகள், ஹாம்பர்கர், பார்பிக்யூ ப்ரிஸ்கெட், வறுத்த மாக்கரோனி சீஸ் மற்றும் தக்காளி மர்மலேட் ஆகியவை முக்கிய உணவுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

the-original dinerant-america

மெருகூட்டப்பட்ட டோனட் பகுதிகளுக்கிடையில் சீஸ் கொண்ட மாட்டிறைச்சி ஸ்லைடர் வைத்து சாப்பிட கொடுக்கப்படுகிறது. இந்த உணவைத்தான் அந்த அற்புத சிகாமணி அடிக்கடி சாப்பிடுவான். அவனுக்கு மிகவும் பிடித்த உணவும் இது தான். கிரேஸி பர்கர் மற்றும் தி கிரேஸி கிரில்ட் சீஸ் ஆகியவை 2016 இல் "ரகசிய" உணவு மெனுவில் இடம்பெற்றன. இனிப்பு மெனுவில் உறைந்த ப்ளூபெர்ரி பீச் ஐஸ் பாக்ஸ் கேக் உள்ளது. இதில் வெள்ளை சாக்லேட் எலுமிச்சை செமிஃப்ரெட்டோ, ஏஞ்சல் ஃபுட் கேக், ப்ளூபெர்ரி மற்றும் பீச் ஆகியவை உள்ளன.

the-original dinerant-america

ஆல்கஹால் மில்க் ஷேக்குகளின் வகைகளாக இருக்கும் பெர்ரி பூஸி, நைட் ரைடர், வாழைப்பழ பெர்ரி மற்றும் சாக்லேட் வேர்க்கடலை வெண்ணெய் ஆகியவையும் விருந்தினர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கேரமல் சோளம் மற்றும் ட்ரெயில் மிக்ஸ், வீடியோ கேம்ஸ், கேன் மூலம் பீர், மற்றும் ஒயின் ஆகிய பெயர்களைக் கொண்ட காக்டெய்ல் உள்ளிட்ட தின்பண்டங்களையும் இங்கு ருசிக்கலாம் என்பது இன்னொரு முக்கிய தகவலாகும்.

the-original dinerant-america

இது அமெரிக்காவுல இருக்குற பிரபலமான உணவகம். அவன்கிட்ட காசு நிறைய இருக்கு. அதனால தினமும் கூட இப்படி சாப்பிடலாம். நான் வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாசத்துக்கு ஒருமுறை ஏதாவது பெரிய ஹோட்டலுக்கு சென்று நாலு பரோட்டா சாப்பிடுவேன். இது தான் அவனுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம். ஆனா அவன் மனசுக்குள்ள என்னைப்போன்ற மனிதர்கள் எல்லாம் விரும்பத்தகாதவர்கள். அவன் அப்படி நினைப்பதால் நான் எதுக்கு மனசு கஷ்டப்படணும். எனக்கு தேவையான அளவு செல்வத்துடன் நான் நிம்மதியாக வாழுறேன் அவ்வளவுதாங்க.